News September 5, 2025
இந்தியர்களை வம்பிழுத்த USA நிர்வாகி.. இந்தியா சாடல்

மலிவு விலை ரஷ்ய கச்சா எண்ணெயால் பிராமணர்களே பலனடைவதாக டிரம்பின் பொருளாதார ஆலோசகர் நவரோ தெரிவித்த கருத்தை, இந்தியா நிராகரித்துள்ளது. இது பொய்யான தகவல் எனவும், மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் சாடியுள்ளது. மேலும், USA உடனான உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. முன்னதாக, நவரோவின் கருத்துக்கு பாஜகவும், காங்கிரசும் கடுமையாக எதிர்வினை ஆற்றியிருந்தன.
Similar News
News September 6, 2025
ராசி பலன்கள் (06.09.2025)

➤ மேஷம் – போட்டி ➤ ரிஷபம் – நன்மை ➤ மிதுனம் – மேன்மை ➤ கடகம் – பிரீதி ➤ சிம்மம் – களிப்பு ➤ கன்னி – வெற்றி ➤ துலாம் – ஆர்வம் ➤ விருச்சிகம் – பரிவு ➤ தனுசு – தனம் ➤ மகரம் – அனுகூலம் ➤ கும்பம் – புகழ் ➤ மீனம் – உயர்வு.
News September 5, 2025
பெண்களை காக்கும் AUTO AKKA!

சென்னையில் இரவு நேர பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு இந்த ஆட்டோ அக்காவை தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. ஆட்டோ அக்கா எனும் ராஜி கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இரவில் பாதுகாப்பாக பயணிக்க நினைக்கும் பெண்கள் முதலில் அழைப்பது இவரை தான். அதுமட்டுமல்ல ஏழை எளிய மக்களிடம் இவர் காசு வாங்குவதில்லை. பெண் ஆட்டோ ஓட்டுநர்களின் நலனுக்காக ‘இணையும் கைகள்’ என்ற குழுவையும் நடத்தி வருகிறார்.
News September 5, 2025
செங்கோட்டையனை பொருட்படுத்தாத EPS

செங்கோட்டையன் கிளப்பிய புயலுக்கு மத்தியில் EPS தனது மக்கள் சந்திப்பு பயணத்தை தொடர்ந்தார். பிரிந்து சென்றவர்களை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் கெடு விதித்தது EPS-க்கு நெருக்கடியாக பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பரப்புரையில் திமுகவை சாடுவதிலேயே குறியாக இருந்தார். OPS, TTV விஷயத்தில் EPS உறுதியாக இருப்பதால், செங்கோட்டையனை பொருட்படுத்த மாட்டார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.