News May 22, 2024
வங்கதேசத்தை வீழ்த்தியது USA

டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக அமெரிக்காவை அவர்கள் மண்ணில் எதிர்கொண்டு விளையாடுகிறது வங்கதேசம். அதன் முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி அசத்தியிருக்கிறது அமெரிக்கா. யாரும் எதிர்பாராத வகையில், புதிய அணியாக களம் இறங்கும் அமெரிக்கா, வங்கதேசத்தை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. நியூசிலாந்து முன்னாள் வீரர் கோரி ஆண்டர்சன் தற்போது அமெரிக்காவுக்காக விளையாடுகிறார்.
Similar News
News November 20, 2025
அங்கு அவமதிப்பு, இங்கு பாசம்: செல்வப்பெருந்தகை

‘தமிழ் கற்க முடியாதது வருத்தம்’ என PM மோடி கோவையில் பேசியிருந்தார். இதுகுறித்து பேசியுள்ள செல்வப்பெருந்தகை, ஒடிசா, பிஹாரில் தமிழர்களை பற்றி அவமதிப்பாக பேசிவிட்டு, தமிழ்நாட்டில் மக்களின் மனதை பிடிக்க, தமிழ் மீது பாசம் இருப்பது போல மோடி பேசுவதாக விமர்சித்துள்ளார். TN-ல் மும்மொழி கொள்கையை திணிக்க முயல்வதும், மாநிலத்திற்கான நிதியை மறுத்து வைப்பதும் பெரிய பிரச்னைகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 20, 2025
பவன் மாதிரி விஜய் ஆகிவிடக் கூடாது: ரோஜா

விஜய், பவன் கல்யாண் மாதிரி இல்லாமல், MGR, ஜெயலலிதா, NTR போன்று இருக்க வேண்டும் என ரோஜா தெரிவித்துள்ளார். அரசியலுக்குள் நுழைந்த பவன், முதலில் போட்டியிடாமல் மற்றவர்களுக்காக வாக்கு கேட்டார். தற்போது TDP, BJP உடன் கூட்டணி அமைத்துள்ளார். அத்துடன், மக்கள் பணத்தில் ஹெலிகாப்டர் என்று வசதியாக வாழ்வதாகவும் ரோஜா விமர்சித்தார். எனவே, விஜய் சரியான திட்டமிடலுடன் அரசியல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
News November 20, 2025
ரஷ்யா – பிரிட்டன் இடையே மோதலா?

பிரிட்டனின் கடல் எல்லைக்குள் நுழைந்த ரஷ்யாவின் கப்பலான ‘Yantar’, கண்காணிப்பு விமானிகள் மீது லேசர் கதிர்களை பாய்ச்சியதாக கூறப்படுகிறது. ரஷ்யா இதை ஆராய்ச்சி கப்பல் என்று கூறினாலும், பிரிட்டன் ரஷ்யாவின் உளவு கப்பல் என குற்றஞ்சாட்டியுள்ளது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது தெரியும் என கூறிய பிரிட்டன் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதன் மூலம் இருநாடுகள் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


