News September 24, 2025

டிரம்ப்பின் அறிவிப்பை ஆதரிக்கும் USA நிறுவனங்கள்

image

H-1B விசா கட்டண உயர்வு குடியேற்றத்தை நெறிப்படுத்துவதற்கான முயற்சி என Nvidia, OpenAI நிறுவனங்கள் ஆதரித்துள்ளன. அதேசமயம், தேசத்தின் வளர்ச்சிக்கு திறன்மிக்க ஊழியர்களின் குடியேற்றம் அவசியம் எனவும், இத்தகைய குடியேற்றத்தால் தான் USA-ன் அடித்தளம் போடப்பட்டுள்ளதாகவும் Nvidia CEO ஜென்சன் ஹுவாங் தெரிவித்துள்ளார். அதேபோல், திறமை மிகு ஊழியர்களை தக்கவைப்பது அவசியம் என OpenAI CEO சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார்.

Similar News

News September 24, 2025

உங்களுக்கு கருவளையம் இருக்கா? இதை செய்யலாம்

image

கண்களுக்குக் கீழே கருவளையங்கள் உருவாவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், அதை
நீக்க வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சில இயற்கையான வழிகளை போட்டோக்களாக மேலே கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாமல் வேறு ஏதேனும் வீட்டிலேயே செய்யக்கூடியவை உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க. கருவளையம் உள்ள உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 24, 2025

மக்கள் நன்மையடைவதை CM விரும்பவில்லை: தமிழிசை

image

மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் கொடுக்க காசு இல்லை, ஆனால் பேனாவுக்கு சிலை வைக்க காசு இருக்கிறதா என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், GST வரி குறைப்பை பாராட்ட CM ஸ்டாலினுக்கு மனமில்லை என சாடினார். மக்களுக்கு நல்லது நடப்பதை CM ஸ்டாலின் விரும்பவில்லை என கூறிய அவர் மக்கள் சார்ந்து செயல்படவும் வலியுறுத்தியுள்ளார்.

News September 24, 2025

தாமதமான நீதியின் கொடுமை..

image

1986-ல் ம.பி., EB Bill Assistant ஜகேஷ்வர் ₹100 லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, 2004-ல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து அவர் சட்டப்போராட்டத்தை முன்னெடுக்க, விசாரணையில் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரம் உறுதியாகாததால், 38 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த செப். 9-ம் தேதி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது அவரின் வாழ்க்கை ஓடிவிட்டது. தாமதமான நீதி எவ்வளவு கொடுமையானது!

error: Content is protected !!