News March 17, 2025
USA – கனடா வரி போர்: Pornhub-க்கு தடை விதிக்கணும்

அமெரிக்கா – கனடா இடையேயான <<15647579>>வரி போர் <<>>தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவுக்கு சரியான பாடம் புகட்ட, கனடாவை சேர்ந்த பிரபல ஆபாச இணையதளமான Pornhub-ஐ அமெரிக்காவில் செயல்படுவதை தடை செய்ய வேண்டும் என பிரபலம் ஒருவர் இன்ஸ்டாவில் பதிவிட்டார். இதற்கு கனடிய மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. அமெரிக்கர்கள் அதிகம் பார்க்கும் ஆபாச தளம் Pornhub தான் என்பது குறிப்பிடத்தக்கது. இது அமெரிக்காவை பணிய வைக்குமா?
Similar News
News September 24, 2025
BREAKING: தீபாவளி போனஸ் அறிவித்தது அரசு

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள்கள் சம்பளத்தை தீபாவளி போனஸாக வழங்க PM மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 10 லட்சத்து 90 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் இதனால் பயன்பெறுவர். தீபாவளி போனஸ் வழங்க ₹1,865 கோடி அரசுக்கு கூடுதலாக செலவாகும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
News September 24, 2025
கடும் சரிவுடன் நிறைவடைந்த பங்குச்சந்தைகள்

இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Sensex 372 புள்ளிகள் சரிந்து 81,729 ஆகவும், நிஃப்டி 110 புள்ளிகள் சரிந்து 25,061 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. அதானி பவர், டாடா மோட்டார்ஸ், கோத்ரேஜ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. அதேநேரம் JSW, சிட்டி யூனியன் பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
News September 24, 2025
மன்னிப்பு கேளுங்க! சீமான், விஜயலட்சுமிக்கு SC எச்சரிக்கை

தனக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இன்று இம்மனு விசாரணைக்கு வந்தபோது, இவ்விவகாரத்தை எத்தனை நாள் இழுத்துக்கொண்டு செல்வது. இருவரும் குழந்தைகள் அல்ல; ஒருவருக்கு ஒருவர் மன்னிப்பு கேட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வாருங்கள். இல்லையென்றால் இருவரையும் நீதிமன்றத்திற்கு வரவழைக்க நேரிடும் என்று நீதிபதி எச்சரித்துள்ளார்.