News January 29, 2026
USA – க்கு படையெடுக்கும் இந்திய நிறுவனங்கள்

இந்தியாவிலிருந்து செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் அமெரிக்காவுக்கு படையெடுத்து செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக வாடிக்கையாளர்கள், விரைவான முதலீடு கிடைக்க வாய்ப்பு, ஏஐ-க்கு உகந்த சூழல் ஆகியவை இந்நிறுவனங்கள் US பக்கம் செல்ல வழிவகுத்துள்ளன. இந்நிலையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரையறையை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
Similar News
News February 18, 2026
வங்கதேசத்தின் புதிய பிரதமரை இந்தியாவுக்கு அழைத்த மோடி

டாக்காவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் வங்கதேசத்தின் புதிய PM-ஆக தாரிக் ரஹ்மான் பதவியேற்றார். நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் பங்கேற்ற லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, தாரிக் ரஹ்மானிடம் PM மோடியின் வாழ்த்து கடிதத்தை கொடுத்தார். அதில் வங்கதேச PM-ஐ குடும்பத்துடன் இந்தியா வர மோடி அழைப்பு விடுத்திருந்தார். மேலும் இரு நாடுகளும் அமைதி, செழுமையை நோக்கி இணைந்து செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
News February 18, 2026
அஜித் பவார் மரணம்… CBI விசாரணை கேட்கும் மனைவி

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாரின் மரணத்தில் சதி இருக்கலாம் என காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சந்தேகித்தனர். மேலும் விசாரணை மந்தமாக நடப்பதாக அவரின் மருமகன் ரோஹித் பவாரும் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில்
அஜித் பவாரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அவரது மனைவி DCM சுனேத்ரா பவார் மற்றும் NCP தலைவர்கள், CM தேவேந்திர பட்னாவிஸிடம் கோரிக்கை அளித்துள்ளனர்.
News February 18, 2026
மோடி வருகை.. தீவிரமாகும் கூட்டணி பேச்சுவார்த்தை

மார்ச் 1-ம் தேதி மதுரை மாவட்டத்திற்கும், மார்ச் 6-ம் தேதி வேலூர் மாவட்டத்திற்கும் பிரதமர் மோடி வருகிறார். பிரதமரின் சுற்றுப்பயண நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்வதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 1-ம் தேதிக்குள் தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளை NDA கூட்டணியில் இணைப்பது குறித்த பேச்சுவார்த்தையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


