News January 29, 2026

USA-ஈரான் இடையே அதிகரிக்கும் பதற்றம்

image

அணு ஆயுத ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை என்றால் ஈரானுக்கு போர் கப்பல்களை அனுப்பி தாக்குதல் நடத்துவேன் என எச்சரித்திருந்தார் <<18877158>>டிரம்ப்<<>>. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, USA எந்த விதமான தாக்குதலை நடத்தினாலும், அதற்கு உடனடியாக பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் கூறியுள்ளார். இதனால், இருநாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

Similar News

News February 14, 2026

போனை DARK MODE-ல் யூஸ் பண்றீங்களா? KNOW THIS!

image

போனில் DARK MODE-ஐ ON செய்வது கண்களுக்கு நல்லது என அனைவருக்குமே தெரியும். ஆனால் அதனால் போனுக்கே நல்லது என உங்களுக்கு தெரியுமா? ஆம், DARK MODE-ல் வைத்து பயன்படுத்துவதால் உங்கள் போன் சூடாவது குறைகிறதாம். இதனால், பேட்டரியும் வீக் ஆகாமல் இருக்கிறது என நிபுணர்கள் சொல்கின்றனர். எனவே இரவு நேரங்களில் DARK MODE-ல் வைத்து போனை பயன்படுத்துங்கள் மக்களே. SHARE THIS.

News February 14, 2026

40 வீரர்கள் உடல் சிதறி பலி.. பல ஆண்டு கடந்தும் ஆறாத ரணம்

image

பிப்.14-ம் தேதி, 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாள் இந்தியாவுக்கு கருப்பு நாளாகவே அமைந்தது. 2019 பிப்.14-ல் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு CRPF வீரர்களுடன் வந்த ராணுவ வாகனம் மீது புல்வாமாவில் பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை கார் மோதி வெடித்ததில், 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு காரணமான பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளை 12 நாள்களில் இந்தியா கொன்றது.

News February 14, 2026

விஜய் – த்ரிஷா.. பெரும் விவாதமான நயினாரின் கருத்து!

image

<<19135589>>விஜய், த்ரிஷாவைவிட்டு வெளியே வரவேண்டும்<<>> என்ற நயினாரின் பேச்சுக்கு, தவெகவினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தலையிட வேண்டும் என தவெகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கருத்தியலை கருத்தியலால் எதிர்கொள்ளாமல் அநாகரிகமாக தனிநபர் தாக்குதலில் ஈடுபடும் நயினார் நாகேந்திரன் அடிப்படை அறிவை இழந்துவிட்டார் என CTR நிர்மல்குமார் சாடியுள்ளார்.

error: Content is protected !!