News March 1, 2025
கூட்டு சேர்ந்த அமெரிக்கா – ரஷ்யா

உலக அரங்கில் பரம எதிரிகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒரே அணியில் நிற்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியிருக்கிறது. ஜோ பைடன் அமெரிக்க அதிபராக இருந்த வரை, ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு பொருளுதவி செய்து வந்தார். தற்போது, பொறுப்பேற்றிருக்கும் டிரம்ப், இனி பொருளுதவி செய்ய முடியாது என்று சொல்லி போரை நிறுத்த சொல்கிறார். இதன்மூலம், அமெரிக்கா மறைமுகமாக ரஷ்யாவின் பக்கம் நிற்கிறது.
Similar News
News March 1, 2025
சீமான் பாதுகாவலருக்கு ஜாமின்

சீமான் வீட்டின் பாதுகாவலர் அமல்ராஜ், பணியாளர் சுபாகர் ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. நடிகை கொடுத்த புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க ஒட்டிய சம்மனை கிழித்தது, போலீசை பணி செய்யவிடாமல் தடுத்தது, போலீசாரை தாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஒரு வழக்கில் மட்டும் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
News March 1, 2025
+2 Exam.. மாணவர்களுக்கு எச்சரிக்கை

நாளை மறுநாள் +2 பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கு தேர்வுத்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மாணவர்கள் யாரும் முறைகேட்டில் ஈடுபட வேண்டாம். மீறி விடைத்தாள் பரிமாற்றம், ஆள்மாறாட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டால், 1 – 5 ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை அல்லது நிரந்தரமாக படிக்கத்தடை விதிக்கப்படும். இதன் காரணமாக மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படலாம் என அலர்ட் கொடுத்துள்ளது.
News March 1, 2025
SAவுக்கு 180 ரன்கள் இலக்கு

CT தொடரில், தென்னாப்பிரிக்காவுக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து. கராச்சி மைதானத்தில் டாஸ் வென்ற ENG முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. ஆனால் SA வீரர்கள் பந்துவீச்சை சமாளிக்க முடியாத ENG அணியினர் 38.2 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டாகினர். அதிகபட்சமாக ரூட் 37, ஆர்ச்சர் 25 ரன்கள் எடுத்தனர். SA தரப்பில் ஜான்சென், மல்டர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.