News January 5, 2026
US துணை அதிபர் வீட்டின் மீது தாக்குதல்

ஓஹியோவில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் வீட்டின் கண்ணாடிகள் சுக்கு நூறாக உடைந்தன. துப்பாக்கிச் சூடு நடந்ததா என சந்தேகிக்கப்படும் நிலையில், தாக்குதல் நடத்திய நபரை பிடித்து போலீஸ் விசாரித்து வருகிறது. ஜே.டி.வான்ஸும் அவரது குடும்பத்தினரும் வேறு ஊரில் இருந்ததால் எந்தவித அசம்பாவிதம் ஏற்படவில்லை.
Similar News
News February 12, 2026
AI-க்கு தயாராகாத ஊழியர்கள் வெளியேறலாம்: கூகுள்

நிறுவனத்துடன் சேர்ந்து பயணிக்க தயாராக இல்லாத ஊழியர்கள் தானாக முன்வந்து ஓய்வு பெறலாம் என்று கூகுள் தெரிவித்துள்ளது. இனி வரும் நாட்களில் AI-ஐ நோக்கி வேகமாக பயணிக்க உள்ளதால், இதற்கு தயாராகாத ஊழியர்கள் வெளியேறலாம் எனவும், அவர்களுக்கு பணிநீக்க தொகுப்பு வழங்கப்படும் என்றும் கூகுள் கூறியுள்ளது. ஆனால், இந்த தொகுப்பு அமெரிக்காவில் பணிபுரியும் சில ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
News February 12, 2026
ராசி பலன்கள் (12.02.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News February 12, 2026
ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: CPI

ஜனநாயகத்திற்கு பேராபத்தான பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற தங்களது இலக்குக்காகவே திமுக கூட்டணியில் சேர்ந்துள்ளோம் என CPI வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், ஆட்சியில் பங்கு என்பது தங்கள் கொள்கை முடிவல்ல; அதேசமயம் இரட்டை இலக்க சீட்களை கேட்டு பெறுவோம் என்றும், கட்சிகளுக்கு இடையேயான மாற்று கருத்துகள் கொள்கை பலம் கொண்ட திமுக கூட்டணியின் ஒற்றுமையை பாதிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.


