News March 16, 2024
தேர்தல் குறித்த அவசர ஆலோசனை

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சங்கீதா தலைமையில் இன்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கான அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
Similar News
News November 10, 2025
மதுரையில் 11ம் வகுப்பு மாணவி தற்கொலை

கூடல்புதூர் கோசாகுளத்தை சேர்ந்தவர் கார்த்திக் மகள் பேபி ஐஸ்வர்யா(16). இவர் மதுரை நகரில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். எந்த நேரமும் இவர் வீட்டில் செல்போன் பார்த்து கொண்டிருந்ததை அவரது தாய் கண்டித்தால் மனமுடைந்து தனது பெட்ரூமில் இன்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து
கொண்டார். கூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 10, 2025
மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்தடை

மதுரையில் உள்ள அனுப்பானடி, தெப்பக்குளம் துணை மின் நிலையங்கள் நாளை (நவ.11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனுப்பானடி: ராஜீவ் காந்தி நகர், ஆவின் பால் பண்ணை, ஐராவதநல்லூர், பாபு நகர், சுந்தரராஜபுரம், சாமநத்தம், அனுப்பானடி ஹவுசிங் போர்டு, தெப்பக்குளம்: தெப்பக்குளம் தெற்கு/மேற்கு, புது ராமநாதபுரம் ரோடு, காமராஜர் சாலை, மைனர் ஜெயில், மீனாட்சி நகர், லட்சுமிபுரம் மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் மின்தடை.
News November 9, 2025
மதுரை: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட, மதுரை ஆரப்பாளையம்
கிருஷ்ணம்பாளையம் 1வது தெருவை சேர்ந்த சுந்தரம் என்பவர் மகன் கோவிந்தம் பிள்ளை, நீதிமன்ற
விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாத காரணத்தால் தேடப்படும் குற்றவாளியாக, மதுரை கூடுதல் மகிளா நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.


