News April 21, 2025
உறையூர் உயிரிழப்பு: கே.என்.நேரு மறுப்பு

திருச்சி உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்தி 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவது ஆதாரமற்றது என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். பேரவையில் இபிஎஸ் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்த அவர், உறையூர் வெக்காளி அம்மன் கோயில் திருவிழாவில் வழங்கிய சுகாதாரமற்ற குளிர்பானத்தை குடித்ததால் தான் பலருக்கு வயிற்று கோளாறு ஏற்பட்டதாகவும், குடிநீரில், கழிவுநீர் கலக்கவில்லை என்றும் கூறினார்.
Similar News
News December 5, 2025
பெரம்பலூரில் வருவாய்துறை சங்கம் மறியல் போராட்டம்

பெரம்பலூர் மாவட்ட வருவாய்த்துறை சங்கம் சார்பில், நேற்று (டிச.04) மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயில் மற்றும் பாலக்கரை ரவுண்டான அருகில் தேர்தல் வாக்குறுதியில் கூறிய, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மறியல் செய்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்பாட்டத்தில், வருவாய்துறை சங்க தலைவர் பாரதிவளவன், செயலாளர் சரவணன் மற்றும் மாவட்டப் பொருளாளர் குமரிஆனந்தன் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.
News December 5, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹4,000 குறைந்தது

கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த வெள்ளியின் விலை மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. நேற்று(டிச.04) பார் வெள்ளி 1 கிலோவுக்கு ₹1,000 குறைந்த நிலையில், இன்று(டிச.05) மேலும் ₹4,000 குறைந்து ₹1,96,000-க்கு விற்பனையாகிறது. சில்லறை விலையில் ₹1 கிராம் வெள்ளி ₹196-க்கு விற்பனையாகிறது.
News December 5, 2025
உங்கள் காரால் உயிருக்கே ஆபத்து.. BIG ALERT!

புதிய காரில் ஒருவிதமான ஸ்மெல் வருவது வழக்கமே என அலட்சியமாக இருக்கவேண்டாம். இது உயிரைக்கொல்லும் Slow poison என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். புதிய காரில் உள்ள பிளாஸ்டிக் கவர், ஷீட்களில் ethylbenzene, formaldehyde, toluene போன்ற கெமிக்கல்கள் இருக்கும். இது வெயிலில்படும் போது ஒருவிதமான ஸ்மெல் வரும். இதனை நீங்கள் சுவாசித்தால் தலைசுற்றல், வாந்தியில் தொடங்கி கேன்சர் கூட வரக்கூடும் என்கின்றனர். SHARE.


