News February 12, 2025

கொந்தளிக்கும் ஆப்பிள் ஐஃபோன் யூசர்ஸ்

image

ஆப்பிளின் லேட்டஸ்ட் வெளியீடான ஐஃபோன் 16 குறித்து பயனாளர்கள் கடும் அதிருப்தி தெரிவிக்கின்றனர். ஃபோன் யூஸ் பண்ணாதபோதே பேட்டரி குறைவதால், நாளொன்றுக்கு 2 முறை சார்ஜ் போட வேண்டிய தேவை இருக்கிறதாம். ஐஃபோன் 16 அதிக சூடாகிறது. ஐஃபோன் 15க்கும் இதற்கும் பெரிய வேறுபாடு ஏதும் இல்லாமல் விலை மட்டும் ஏற்றப்பட்டுள்ளது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

Similar News

News February 13, 2025

எவ்வளவு நேரம் தூங்காமல் இருக்கலாம்?

image

சராசரி மனிதனுக்கு 7 முதல் 9 மணி நேர தூக்கம் தேவை. ஆனால், 24 மணி நேரத்திற்கு மேல் தூங்காமலே இருப்பது மிகவும் சிரமம். தொடர்ந்து 36 மணி நேரங்கள் தூங்காமல் இருந்தால், தீவிர பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்கின்றனர் டாக்டர்கள். இருப்பினும், 1963ஆம் ஆண்டு ராண்டி கார்ட்னர் என்பவர் தொடர்ந்து 11 நாள்கள் தூங்காமல் இருந்தார். ஆனால், இது விபரீத முயற்சி என்கிறது மருத்துவ உலகம்.

News February 13, 2025

கர்ப்பத்தை கலைக்கும் உரிமை உள்ளது

image

பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கருவை கலைத்துக் கொள்ளும் உரிமை உள்ளதாக அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 17 வயது சிறுமி தொடர்ந்த வழக்கில், அவருக்கு குழந்தையை வளர்க்கும் பக்குவம் இல்லை என்று வழக்கறிஞர் வாதிட்டார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சிறுமியை கருவை கலைக்க விடாமல் செய்வது அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்று கூறி கருவை கலைக்க உரிமையளித்தனர்.

News February 13, 2025

ராசி பலன்கள் (13.02.2025)

image

மேஷம் – சாந்தம், ரிஷபம் – திறமை, மிதுனம் – சஞ்சலம், கடகம் – சிரத்தை, சிம்மம் – வாழ்வு, கன்னி – சிக்கல், துலாம் – போட்டி, விருச்சிகம் – இன்பம், தனுசு – பாசம், மகரம் – பணவரவு, கும்பம் – பகை, மீனம் – குழப்பம்.

error: Content is protected !!