News December 11, 2024
UPSC மாதிரி ஆளுமைத் தேர்வு: TN அரசு முக்கிய அப்டேட்

UPSC பயிற்சி மையத்தில் மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்குபெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வரும் 18 முதல் 20ஆம் தேதி வரை இந்த மாதிரி ஆளுமைத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. <
Similar News
News August 13, 2025
தேர்தல் ஆணையத்தை நாடும் அன்புமணி

பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையத்தில் வழங்க அன்புமணி முடிவு செய்துள்ளார். சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில், அன்புமணியின் பாமக தலைவர் பதவி காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த பொதுக்குழு செல்லாது என்று ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், பொதுக்குழுவால் தலைவராக தேர்வானதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்தை (EC) அன்புமணி நாடவிருக்கிறார்.
News August 13, 2025
அரிவாளை பார்த்ததும் கவின் ஓடினான்: சுர்ஜித் வாக்குமூலம்

நெல்லையில் கவினை ஆணவப்படுகொலை செய்த சுர்ஜித், அவனது தந்தை சரவணனிடம் தனித்தனியே சிபிசிஐடியினர் விசாரித்தனர். இதன்பின் கொலை நடந்த KTC நகருக்கு சுர்ஜித்தை அவர்கள் அழைத்து சென்றனர். அங்கு, கவினை கொலை செய்ய அரிவாளை எடுத்தபோது, தவறுதலாக கீழே விழுந்ததும், அதை பார்த்தவுடன் கவின் ஓடியதாகவும், பின்னர் துரத்தி சென்று வெட்டியதையும் சுர்ஜித் நடித்து காண்பித்தான். இதனை சிபிசிஐடியினர் வீடியோ பதிவு செய்தனர்.
News August 13, 2025
3வது நாளாக தங்கம் விலை குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக இன்றும் குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹40 குறைந்து ₹74,320-க்கும், கிராமுக்கு ₹5 குறைந்து ₹9,290-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் ₹560,நேற்று ₹640, இன்று 40 என மொத்தம் மூன்று நாளில் ₹1240 சவரனுக்கு குறைந்துள்ளது.