News March 25, 2026

UPSC பாஸ் பண்ணலனாலும் அரசு வேலை; பலே திட்டம்

image

UPSC தேர்வில் இறுதிக்கட்டம் வரை சென்றும் பணி வாய்ப்பை பெற முடியவில்லையா? நீங்களும் மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற பிரதிபா சேது என்ற இணையதளம் உள்ளது. இதில் உங்கள் Bio Data, கல்வி தகுதி உள்ளிட்ட தகவல்களை உள்ளிட்டு, விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதன்மூலம் உங்கள் Profile-க்கு நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கும். SHARE.

Similar News

News April 8, 2026

முன்னாள் அமைச்சர் காலமானார்

image

காங்., மூத்த தலைவரும், Ex மத்திய அமைச்சருமான மோஹ்ஷினா ஹித்வாய் (94) வயதுமூப்பால் காலமானார். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி அமைச்சரவையில் (1982 – 1989) இடம்பெற்ற இவர், மருத்துவம், ஊரக & நகர்ப்புற மேம்பாட்டு துறைகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்நிலையில், தனது எளிமை & கண்ணியமான அரசியலால் பல பெண்களுக்கு முன்னுதாரணமாக மோஹ்ஷினா திகழ்ந்துள்ளார் என ராகுல் X-ல் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

News April 8, 2026

தமிழக தேர்தல்: ₹462 கோடி பறிமுதல்

image

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததுமுதல் நேற்றுவரை ₹462.74 கோடி மதிப்பு பணம், பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. ₹92.07 கோடி ரொக்கப் பணம், ₹2.04 கோடி மதிப்புள்ள மதுபானம், ₹75.76 கோடி மதிப்புள்ள போதைப்பொருள், ₹214.38 கோடி தங்கம் & வெள்ளி, ₹78.49 கோடி மதிப்புள்ள இலவச பரிசு பொருள்களை பறக்கும்படை பறிமுதல் செய்துள்ளது.

News April 8, 2026

இனி 4 ஆண்டு B.Sc, B.Ed படிப்பு கிடையாது

image

பட்டப்படிப்புடன் ஆசிரியர் பயிற்சியும் இணைந்த ஒருங்கிணைந்த 4 ஆண்டு B.Sc, B.Ed மற்றும் B.A, B.Ed படிப்புகளை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) வழங்கிவந்தது. இப்படிப்புகள் 2026-27 கல்வியாண்டு முதல் நிறுத்தப்படுவதாக TNTEU அறிவித்துள்ளது. மேலும், கல்வியியல் கல்லூரிகள் இந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை மேற்கொண்டால் எந்த விதத்திலும் TNTEU பொறுப்பேற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!