News April 24, 2025
UPSC தேர்வில் சிவகாசியை சேர்ந்த இருவர் சாதனை

சிவகாசியைச் சேர்ந்த கோகுல் மற்றும் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியைச் சேர்ந்த கோகுல கண்ணன் இருவரும் UPSC தேர்வில் வெற்றி பெற்று விருதுநகர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்களின் வெற்றி விருதுநகர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கக்கூடிய ஒரு விஷயம். சிவகாசியில் பிரதான தொழிலாக உள்ள பட்டாசு தொழிலை மட்டும் நம்பி இருக்காமல் மாற்று தொழிலையும் ஏற்படுத்த வேண்டும் என்பது இவர்களின் ஆசையாக உள்ளது.Share.
Similar News
News April 25, 2025
கல்லூரி மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் நாவுபாடா(19) என்பவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மாணவரின் உடல் விருதுநகர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
News April 25, 2025
ஸ்ரீவி கொலையில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

ஸ்ரீவி அருகே பாட்டக்குளம் அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் முருகன்(29). இவர் அதே பகுதியில் பெண்களை கேலி செய்து, தவறாக நடந்து வந்த லாரன்ஸ் என்ற யோகராஜ்(21) என்பவரை கண்டித்ததால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதில் கடந்த 2021-ம் ஆண்டு முருகனை யோகராஜ் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இந்த வழக்கில் குற்றவாளி யோகராஜ்க்கு ஆயுள் சிறை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
News April 24, 2025
திருச்சி செல்லும் ஆண்டாள் சூடிய மாலை பட்டு வஸ்திரம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் சித்திரை திருவிழாவில் சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தின் போது நம் பெருமாள், ஆண்டாள் கூடிய மாலை அணிந்து எழுந்தருளுவது வழக்கம். இதற்காக இன்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் பூ மாலை ஆகியவை திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.