News January 1, 2025
UPI123Pay பணம் அனுப்பும் வரம்பு 2 மடங்கு அதிகரிப்பு

FEATURE போன் வாடிக்கையாளர்களுக்கு உருவாக்கப்பட்டது UPI123Pay செயலி. இதன் மூலம் மற்ற UPI பயனாளர்களுக்கு தினமும் ரூ.5,000 மட்டுமே இதுவரை அனுப்ப முடிந்தது. அதை ரிசர்வ் வங்கி அண்மையில் 2 மடங்கு அதிகரித்தது. அதன்படி, இன்று முதல் ஒருநாளைக்கு ரூ.10,000 வரை அனுப்பலாம். அதேநேரத்தில், மற்ற UPI செயலிகளான GPAY, Paytm, PHONE PE உள்ளிட்டவற்றுக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை. ரூ.1 லட்சம் வரை அனுப்பலாம்.
Similar News
News December 4, 2025
தூர்தர்ஷன் தலைவர் ராஜினாமா!

தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ ஆகியவற்றை நிர்வகிக்கும், பிரசார் பாரதியின் தலைவராக இருந்த நவ்நீத் குமார் செகல், ராஜினாமா செய்துள்ளார். 4 ஆண்டுகளாக காலியாக இருந்த தலைவர் பதவியில், அவர் மார்ச், 2024-ல் பொறுப்பேற்றார். ஆனால், 2 ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில் பதவி விலகியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில், அவரது ராஜினாமாவை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
News December 4, 2025
தமிழக தேர்தல்.. அறிவித்தது தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான ஆயுத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், 2 முதல் 4 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உடனே தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வார்கள்.
News December 4, 2025
தமிழ்நாட்டில் Financial Pollution: MP வில்சன்

TN-க்கான நிதியை நிறுத்தி மத்திய அரசு ‘நிதி மாசுபாட்டை’ உருவாக்கியுள்ளதாக பார்லி.,யில் MP வில்சன் குற்றஞ்சாட்டியுள்ளார். நிலுவையில் உள்ள நிதியை பட்டியலிட்ட அவர், ஜல் ஜீவன் திட்டத்தில் ₹3,112 கோடி, நெல் கொள்முதல் & மானியங்களுக்காக ₹2,670 கோடி, சமக்ர சிக்ஷாவுக்கு ₹3,548 கோடி இன்னும் வராமல் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், மக்களுக்கான நீதியை உறுதி செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


