News August 31, 2024
வங்கி கணக்கு இல்லாமல் UPI பரிவர்த்தனை

GPay செயலியில் <<13877891>>UPI Circle<<>>, UPI Voucher போன்ற புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. UPI Voucher வசதியில், நீங்கள் விரும்பும் நபருக்கு ப்ரீபெய்டு Voucherகளை அவர்களது மொபைல் எண்ணுக்கு அனுப்ப முடியும். அதை பயன்படுத்தி அவர்கள் எந்தவொரு UPI செயலி மூலமும் தேவையான பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். இதற்காக அவர்கள் UPI உடன் வங்கி கணக்கை இணைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
Similar News
News July 8, 2025
சாதி பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய ரஷ்மிகா

கொடவா சமூகத்தில் இருந்து திரைத்துறையில் நுழைந்த முதல் நடிகை தான் தான் என்று ரஷ்மிகா மந்தனா கூறியது சர்ச்சையாகியுள்ளது. ஏனென்றால், இச்சமூகத்தில் இருந்து பிரேமா, தஸ்வினி, கரும்பையா, ரீஷ்மா, ஸ்வேதா, வர்ஷா பொல்லம்மா, ஹரிசிகா பூனாச்சா, சுப்ரா அய்யப்பா ஆகியோர் திரைக்கு வந்துள்ளனர். இதனால், ரஷ்மிகாவின் கருத்துக்கு அச்சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
News July 8, 2025
டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு: இஸ்ரேல் கடிதம்

USA அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நோபல் பரிசு கமிட்டிக்கு கடிதம் அனுப்பி பரிந்துரைத்துள்ளதாக இஸ்ரேல் PM நெதன்யாகு தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இரவு விருந்தில், தனிப்பட்ட முறையில் டிரம்ப்பிடமும் அக்கடிதத்தை அவர் கொடுத்தார். இதற்கு தகுதியான நீங்கள் நிச்சயம் விருதை வெல்வீர்கள் என்றும் அவர் US அதிபரிடம் கூறினார். இது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
News July 8, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹400 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 8) சவரனுக்கு ₹400 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,060-க்கும், சவரன் ₹72,480-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி 1 கிராம் ₹120-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,20,000-க்கும் விற்பனையாகிறது.