News March 13, 2025
UPI சேவைகள் முடக்கம்: SBI விளக்கம்

நாடு முழுவதும் SBI வங்கியின் <<15739560>>UPI சேவைகள்<<>> முடங்கியதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து விளக்கமளித்த எஸ்பிஐ, UPI பரிவர்த்தனைகளில் தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொண்டுள்ளதால், வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை தோல்வியடைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. இதனை சரிசெய்ய முயற்சித்து வருவதாகவும், வாடிக்கையாளர்கள் UPI LITEஐ பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
Similar News
News March 13, 2025
வேண்டும் வரன்களை அருளும் குரு காயத்ரி மந்திரம்!

ஓம் விருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருஹ் ப்ரசோதயாத்
பொருள்:
இடப்பக்கத்தில் கொடியை வைத்திருக்கும் குரு பகவானே, எப்போதும் உங்கள் அருட்கரங்களால் அருள்மழை பொழியும் ப்ரகஸ்பதியே, என் வாழ்வில் உள்ள தீமைகளை அகற்றி நன்மைகளை அளித்திட வேண்டுகிறேன்.
News March 13, 2025
கல்வி உதவித் தொகை: மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம்

பள்ளி மாணவர்கள் போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் OBC, EBC & DNT பிரிவினருக்கு பிரதம மந்திரி (PM YASASVI) கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 10ஆம் வகுப்பிற்கு ₹75,000, +2க்கு ₹1.25 லட்சமும் வழங்கப்படும். இதற்கு, <
News March 13, 2025
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் 2024-25 கல்வி ஆண்டு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. அந்த வகையில், 1 – 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்.9 – 24ஆம் தேதி வரை முழு ஆண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு <<15738675>>அட்டவணையும்<<>> வெளியாகியுள்ளது. தொடர்ந்து, கோடை விடுமுறை குறித்த அறிவிப்பும் வந்துள்ளது. அதன்படி, 1 – 5ஆம் வகுப்புக்கு ஏப்.22ல் இருந்தும், 6 – 9 ஆம் வகுப்புக்கு ஏப்.25ல் இருந்தும் விடுமுறை தொடங்குகிறது.