News August 7, 2025
நாடு முழுவதும் UPI சேவை பாதிப்பு

இரவு 7.45 மணிக்கு மேல் Gpay, Phonepe, Paytm செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. HDFC, SBI, BANK OF BARODA, KOTAK MAHINDRA உள்ளிட்ட முக்கியமான வங்கிகளின் UPI சேவை முடங்கியுள்ளது. இரவு 8.30 மணியளவில் புகார் தெரிவிக்கும் வலைதளத்தில் 2,000-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்துள்ளன. அவற்றில் பெரும்பாலும் பணம் செலுத்தும்போது சிக்கல் எழுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கும் UPI பிரச்னை உள்ளதா?
Similar News
News March 7, 2026
சைபர் மோசடியில் பணத்தை இழந்தால் இழப்பீடு

சைபர் மோசடியில் ₹50,000-க்கும் குறைவான தொகையை இழந்திருந்தால், ₹25000 வரை இழப்பீடு வழங்க RBI ஆலோசித்து வருகிறது. பணத்தை இழந்த 5 நாள்களுக்குள் புகார் அளிக்கப்பட்டால், எந்த கேள்வியும் கேட்காமல் இந்த தொகை வழங்கப்படும். இந்த திட்டம் குறித்து ஏப்ரல் 6 வரை வங்கிகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். இது நடைமுறைக்கு சாத்தியமாக இருந்தால், ஜூலை 1 முதல் இத்திட்டம் அமலுக்கு வரும்.
News March 7, 2026
புதுச்சேரியில் கம்யூனிஸ்ட் தனித்து போட்டி.. திமுக ஷாக்!

புதுச்சேரியில் 2 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளதால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது. TN-ல் நீண்ட இழுபறிக்கு பிறகு ஒருவழியாக கூட்டணி இறுதி வடிவம் பெற்றுள்ளது. ஆனாலும், புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மோதல் போக்கு நீடிக்கிறது. இதனால், லாஸ்பேட்டை மற்றும் திருபுவனை தொகுதியில் தனித்து களம் காண்பதாக CPM அறிவித்துள்ளது. இது பற்றி உங்கள் கருத்து?
News March 7, 2026
இந்தியாவை போட்டியாளராக மாற விடமாட்டோம்: அமெரிக்கா

சீனாவை போல இந்தியாவை எங்களது போட்டியாளராக மாற விடமாட்டோம் என டெல்லியில் நடந்த மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவுக்கு சந்தையை திறந்து விட்டது மிகப்பெரிய தவறு; அதை நாங்கள் மீண்டும் செய்ய மாட்டோம் என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் செய்யும் எந்த ஒரு ஒப்பந்தமும் அமெரிக்க மக்களின் நலனுக்கானது எனவும் கூறியுள்ளார்.


