News August 13, 2024

8,326 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு குறித்த UPDATE

image

மத்திய அரசில் 8,326 மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப், ஹவில்தார் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், தேர்வுகள் செப்.30 முதல் நவ.14 வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. மற்ற விவரங்களை <>SSC<<>> இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31ம் தேதியுடன் அவகாசம் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 6, 2026

மகளிருக்கு.. ஸ்டாலின் கொடுக்கும் இன்ப அதிர்ச்சி

image

திராவிட மாடல் 2.0-வில், புதிய அறிவிப்புகளை துறைவாரியாக இன்று வெளியிடவுள்ளதாக CM அறிவித்துள்ளார். ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ திட்டத்தில் பெறப்பட்ட மக்களின் யோசனைகளை தொகுத்து, அதில் நிறைவேற்ற வாய்ப்புள்ளவற்றை அவர் அறிவிக்கவுள்ளார். இதில், மகளிர் உரிமைத் தொகை உயர்வு எப்போது முதல் வரவு வைக்கப்படும், ஊக்கத்தொகை உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை இன்ப அதிர்ச்சியாக CM வெளியிடலாம் என கூறப்படுகிறது.

News March 6, 2026

லஞ்ச வழக்கில் சிக்கிய திமுக MLA? வீடியோ ஆதாரத்துடன் ED

image

அமைச்சர் நேருவுக்கு எதிரான ED அறிக்கையில் பாளையங்கோட்டை திமுக MLA அப்துல் வஹாப்பின் பெயரும் அடிபடுவதால் அறிவாலயத்தை புது புயல் ஆட்டிப்பார்க்க தொடங்கியுள்ளதாக பேசப்படுகிறது. ED அறிக்கையில், CM பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக நிதி திரட்டுவதாக கூறி, நகராட்சி அதிகாரிகள் 43 பேரிடம் இருந்து தலா ₹1 லட்சத்தை MLA வசூலித்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாம். இதற்கு வீடியோ ஆதாரங்களும் இருக்கிறது என்கின்றனர்.

News March 6, 2026

2-வது குழந்தை பெறுவோருக்கு ₹25,000..

image

பிறப்பு விகிதத்தை உயர்த்த புதிய திட்டத்தை AP அரசு பரிசீலித்து வருகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தையை பெறுவோருக்கு, ₹25,000 ஊக்கத்தொகை வழங்க திட்டமிட்டுள்ளதாக CM சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மாநிலத்தின் கருவுறுதல் விகிதத்தை 1.5-ல் இருந்து 2.1 ஆக உயர்த்துவதே அரசின் நோக்கம் என கூறியுள்ளார். மேலும், மக்கள் தொகை மேலாண்மைக்கான புதிய கொள்கை மார்ச் இறுதிக்குள் அறிவிக்கப்படவுள்ளதாம்.

error: Content is protected !!