News May 2, 2024

கண்டெய்னர்களில் ₹2,000 கோடி சிக்கியது குறித்து புதுத் தகவல்

image

ஆந்திராவில் 4 கண்டெய்னர் லாரிகளில் ₹2,000 கோடி சிக்கியது குறித்து புதுத் தகவல் வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கி உத்தரவின்பேரில் கொச்சினில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ஐசிஐசிஐ வங்கிக்கு ₹500 கோடி, பெடரல் வங்கிக்கு ₹1,000 கோடி, எச்டிஎப்சி வங்கிக்கு ₹500 கோடி கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆவணங்களை சரிபார்த்ததில் உறுதியானதால் லாரிகள் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

Similar News

News January 29, 2026

வீட்டுப் பத்திரம் தொலைந்து விட்டதா?

image

அசல் சொத்து பத்திரம் தொலைந்து விட்டால் பதற வேண்டாம். நகலை பெற முதலில் FIR பதிவு செய்ய வேண்டும்*ஆங்கிலம், பிராந்திய மொழி நாளிதழ்களில் விளம்பரம் கொடுங்கள் *பதிவாளர் அலுவலகத்தில் சொத்தின் விபரங்கள், FIR நகல், செய்தித்தாள் விளம்பர நகலை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்த சான்றிதழை நோட்டரி மூலம் சான்றளிக்க வேண்டும் *நகல் பெறுவதற்கான கட்டணத்தை அலுவலகத்தில் Deposit செய்ய வேண்டும்.

News January 29, 2026

தைப்பூசம் விடுமுறை.. 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள்

image

தைப்பூசம், வார விடுமுறை நாள்களையொட்டி, நாளை, நாளை மறுநாள், பிப்.1-ம் தேதி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து 1,205 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. முருகன் கோயில்களுக்கு மக்கள் நெரிசலின்றி செல்ல ஏதுவாக கூடுதல் பஸ்களை தமிழக அரசு இயக்குகிறது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். <>www.tnstc.in<<>> இணையதளம் (அ) TNSTC செயலியில் இப்போதே டிக்கெட் புக் செய்யுங்கள் நண்பர்களே!

News January 29, 2026

நாட்டின் வளர்ச்சி 6.8%-7.2% ஆக இருக்கும்

image

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் நாளான இன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். சிக்கலான உலக பொருளாதார சூழலில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது என்ற அவர், வரும் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 6.8%-7.2% ஆக இருக்கும் என கூறியுள்ளார். பொதுவாக, பட்ஜெட்டுக்கு முன்னதாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இதுதான் அரசு என்ன கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

error: Content is protected !!