News May 2, 2024
கண்டெய்னர்களில் ₹2,000 கோடி சிக்கியது குறித்து புதுத் தகவல்

ஆந்திராவில் 4 கண்டெய்னர் லாரிகளில் ₹2,000 கோடி சிக்கியது குறித்து புதுத் தகவல் வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கி உத்தரவின்பேரில் கொச்சினில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ஐசிஐசிஐ வங்கிக்கு ₹500 கோடி, பெடரல் வங்கிக்கு ₹1,000 கோடி, எச்டிஎப்சி வங்கிக்கு ₹500 கோடி கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆவணங்களை சரிபார்த்ததில் உறுதியானதால் லாரிகள் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
Similar News
News March 19, 2026
சுபமுகூர்த்தம்.. வாக்குப்பதிவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள ஏப்.23-ம் தேதி (சித்திரை 10), இந்தாண்டின் மிகச்சிறந்த வளர்பிறை சுபமுகூர்த்த நாளாக உள்ளது. இதனால் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்காக பலரும் வெளியூருக்கு செல்ல நேரிடும். மேலும் முகூர்த்த நேரம் காலை 9-10:30 மணிக்குள் இருப்பதால், அவர்கள் வாக்குச்சாவடிக்கு வரமுடியாமல் போனால் வாக்குப்பதிவு பாதிக்கப்படும். இதனால் அரசியல் கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர்.
News March 19, 2026
விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், ரம்ஜானை முன்னிட்டு நாளை முதல் 3 நாள்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுவரை 20,000-க்கும் மேற்பட்டோர் சிறப்பு பஸ்களில் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். TNSTC செயலி (அ) இணையதளம் மூலம் இப்போதே டிக்கெட் புக் செய்து நெரிசலின்றி பயணம் செய்யுங்கள். SHARE IT
News March 19, 2026
ரயில்களில் தலையணை, பெட்ஷீட் திருடினால்..?

யாருக்கு தெரியப்போகுது என்று ரயிலில் பயணிக்கும் போது, தலையணை – பெட்ஷீட்களை திருடினால் என்ன தண்டனை தெரியுமா? ரயில்வே சொத்துச் சட்டம், 1966-ன் படி திருடிய பொருள்களுடன் முதல்முறையாக பிடிபட்டால், 1 வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது ₹1,000 அபராதம் விதிக்கப்படும். 2017-18-ம் ஆண்டின் அறிக்கையின்படி, மேற்கு ரயில்வேயில் 1.95 லட்சம் துண்டுகள், 81,736 பெட்ஷீட்கள், 5,038 தலையணைகள் திருடு போயிருக்கிறதாம்.


