News January 11, 2026
UPDATE: ஈரோட்டிற்கு மழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் இன்று(ஜன.11) காலை முதல் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஈரோடு மாவட்டத்திற்கு பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. (மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் போங்க)
Similar News
News January 31, 2026
சென்னிமலையில் வசமாக சிக்கிய திருடன்!

சென்னிமலை வாரச்சந்தை எதிரே நேற்று மாலை முகாசி பிடாரியூரைச் சேர்ந்த மனோகரன் (64) என்பவர் நிறுத்தியிருந்த டிவிஎஸ் வாகனத்தை மர்ம நபர் திருடினார். இதைக் கண்ட மனோகரன், சற்றும் தாமதிக்காமல் மற்றொரு வாகனத்தில் திருடனை விரட்டிச் சென்று முத்தையன் கோவில் பஸ் ஸ்டாப் அருகே மடக்கிப் பிடித்தார். பிடிபட்ட சேலம் எடப்பாடியைச் சேர்ந்த மணிவேல் (41) என்பவரை போலீசில் ஒப்படைத்தார். அவரிடமிருந்து வாகனம் மீட்கப்பட்டது.
News January 31, 2026
ஈரோடு கலெக்டர் அதிரடி உத்தரவு!

ஈரோடு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தோட்டத்தில் பனை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது. இந்தப் பனை மரங்கள் பல்வேறு மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. பல்வேறு கலைப் பொருட்கள், பதநீர் போன்றவற்றிற்காக மக்கள் பலர் இதனை சார்ந்து வாழ்கின்றனர். அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் பனை மரங்கள் வெட்ட ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதி கடிதம் இல்லாமல் வெட்டக்கூடாது என மாவட்ட ஆட்சித் தலைவர் சி கந்தசாமி தெரிவித்துள்ளார்.
News January 30, 2026
ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இன்று (30.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


