News October 25, 2024
உ.பி. இடைத்தேர்தல்: சமாஜ்வாதி தனித்து போட்டி

உ.பி.யில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 9 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக, பகுஜன் சமாஜ் தனித்தனியே போட்டியிடுகின்றன. அதேபோல் சமாஜ்வாதியும் தனியே போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை. இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
Similar News
News January 12, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய அறிவிப்பு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ₹3000 ரொக்கப் பணமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஜன.8-ம் தேதி முதல் இன்று வரை சுமார் 2,04,10,899 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத்தொகை ₹6,123.26 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மீதமுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 12, 2026
ஷிகர் தவானுக்கு நிச்சயதார்த்தம் ❤️PHOTO❤️

Ex இந்திய வீரர் ஷிகர் தவானுக்கு அவரது காதலி சோஃபி ஷைனியுடன் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தனது கையில் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்துள்ள போட்டோவை ஷிகர் தவான் SM-ல் பகிர்ந்துள்ளார். இதற்கு ❤️❤️❤️ பதிவிட்டு ரசிகர்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். ஏற்கெனவே, ஆயிஷா முகர்ஜி என்பவரை திருமணம் செய்து 2023-ல் ஷிகர் தவான் விவகாரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 12, 2026
வரலாற்றில் முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட்

2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ம் தேதி (ஞாயிறு) தாக்கல் செய்யப்படும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது, நாட்டின் வரலாற்றில் இதுவே முதல்முறை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 9வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். மேலும், 28-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும்.


