News November 22, 2024
தமிழ் தலைவாஸை வீழ்த்திய UP யோதாஸ்

ப்ரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி UP யோதாஸ் அணி வெற்றி பெற்றது. உ.பி.யில் நடைபெற்ற போட்டியில் UPY அணி 40-24 என்ற புள்ளி கணக்கில் TT அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ஆல் அவுட் பாயிண்ட் 4, எக்ஸ்ட்ரா பாயிண்ட் 5 எடுத்தது UPY அணியின் வெற்றிக்கு வித்திட்டது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள TT அணி, 4 வெற்றி, 7 தோல்வி, 1 டிராவுடன் புள்ளி பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது.
Similar News
News October 25, 2025
தமிழ் நடிகர் காலமானார்.. நிறைவேறாத கடைசி ஆசை

நடிகை ‘ஆச்சி’ மனோரமாவின் மகன் <<18081336>>பூபதியின்<<>> மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 1000 படங்களில் தனது அசாத்திய நடிப்பால் பெரும் புகழ்பெற்ற மனோரமா, தான் எவ்வளவு முயன்றும் தனது சொந்த மகனை சினிமாவில் ஜொலிக்க வைக்க முடியவில்லை. பூபதி, சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும் பிரபலமடையவில்லை. இதனால், மனோரமாவின் கடைசி ஆசையும் மண்ணில் புதைந்துவிட்டது என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News October 25, 2025
BREAKING: இந்தியா பவுலிங்

சிட்னியில் நடக்கும் 3-வது ODI-ல் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தொடரை இழந்துவிட்ட இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்திய அணி: கில்(C), ரோஹித், கோலி, ஷ்ரேயஸ் ஐயர், KL ராகுல், அக்சர் படேல், சுந்தர், பிரசித் கிருஷ்ணா, ராணா, குல்தீப், சிராஜ். இன்று வெற்றி பெறுமா இந்தியா?
News October 25, 2025
Ola, Uber-க்கு செக்.. விரைவில் வரும் ‘பாரத் டாக்ஸி’

Ola, Uber போல மத்திய அரசின் ‘பாரத் டாக்ஸி’ டிசம்பர் மாதம் நாட்டில் அறிமுகமாக உள்ளது. முதல் கட்டமாக டெல்லியில் இந்த சேவை 650 டாக்ஸிகளுடன் தொடங்கப்பட்டு, பிறகு 2026-ல் 20 நகரங்களுக்கு விரிவடையவுள்ளதாக கூறப்படுகிறது. அதிக கட்டணத்துக்காக Ola, Uber போன்ற நிறுவனங்கள் சமீபகாலமாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த பாரத் டாக்ஸி நல்ல வரவேற்பை பெறும் என நம்பப்படுகிறது.


