News August 14, 2024
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல்: ராகுல் காந்தி

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக காங்., எம்பி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். கடுமையான சட்டங்கள் இருந்தும் இது போன்ற சம்பவங்களை ஏன் தடுக்கமுடியவில்லை என கேள்வி எழுப்பிய அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தான் உறுதுணையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News August 24, 2025
பகல் 12 மணி வரை இன்று.. முக்கிய செய்திகள்

✪கனிமொழிக்கு <<17502789>>பெரியார் <<>>விருது.. திமுக அறிவிப்பு
✪தமிழுக்கு நிதி <<17502734>>ஒதுக்க <<>>மனமில்லை.. ஆ.ராசா விமர்சனம்
✪10% <<17500685>>வாக்குறுதிகளை <<>>கூட திமுக நிறைவேற்றவில்லை.. EPS
✪<<17502649>>கிரிக்கெட்டில் <<>>இருந்து ஓய்வு பெற்றார் புஜாரா
✪விஜய், <<17500901>>அஜித் <<>>போலதான் SK.. முருகதாஸ் புகழாரம்.
News August 24, 2025
BREAKING:கனிமொழிக்கு புதிய அங்கீகாரம்.. திமுக அறிவிப்பு

செப்.17-ல் கரூரில் திமுக முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. இதனையொட்டி, திமுக துணை பொதுச் செயலாளரும், கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவருமான MP கனிமொழிக்கு ‘பெரியார் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா விருது – சுப.சீத்தாராமன், கலைஞர் விருது – சோ.மா.இராமச்சந்திரன், பாவேந்தர் விருது – குளித்தலை சிவராமன், பேராசிரியர் விருது – மருதூர் ராமலிங்கம், மு.க.ஸ்டாலின் விருது – பொங்கலூர் நா.பழனிச்சாமி.
News August 24, 2025
இன்ஸ்டா ரீல்ஸ் பிரியர்களுக்கு செம அப்டேட்

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரியர்களுக்கு அசத்தலான அப்டேட்டை மெட்டா வழங்கியுள்ளது. ரீல்ஸ்களை போஸ்ட் செய்யும்போது ‘Link a reel’ என்ற புதிய ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது ரீல்ஸ்களை அடுத்தடுத்து வர வைக்க முடியும். அதாவது, புதிய ரீல்ஸை பதிவிடும்போது, இதன் மூலம் நமது முந்தைய ரீல்ஸ்களை செலக்ட் செய்ய முடியும். பின்னர் போஸ்ட் செய்தால், புதிய ரீல்ஸ்களுக்கு அடுத்து நம்முடைய பழைய ரீல்ஸ்கள் வரும்.