News February 12, 2025

இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமல்ல: ஹைகோர்ட்

image

மனைவியுடன் இயற்கைக்கு மாறாக உடலுறவு வைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமல்ல என்று சத்தீஸ்கர் ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல,15 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் இயற்கை மாறாக எந்த வகையில் உடலுறவு வைத்தாலும் அது பலாத்காரம் ஆகாது என்றும் நீதிபதிகள் கூறினர். சத்தீஸ்கரை சேர்ந்த பெண் ஒருவர், கணவரின் இயற்கைக்கு மாறான உடலுறவால் மரணமடைந்த வழக்கை விசாரித்த போது, இந்தக் கருத்தை தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

Similar News

News March 13, 2026

CEC-யை பதவி நீக்க தீர்மானம்… 193 MP-கள் கையெழுத்து!

image

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தில் 193 எதிர்க்கட்சி MP-கள் கையெழுத்திட்டுள்ளனர். இதனை, விரைவில் லோக்சபா (அ) ராஜ்யசபாவில் சமர்ப்பிக்க உள்ளனர். தேர்தல் ஆணையரை பதவிநீக்கம் செய்ய கோருவது நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும். தேர்தல் முறைகேடுகள் மற்றும் எதிர்க்கட்சிகள் மீது பாகுபாடு காட்டுவதாக அவர்மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

News March 13, 2026

வீட்டு சிலிண்டர் கிடைக்காது.. BIG SHOCKING

image

போர் பதற்றத்துக்கிடையே கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இன்னும் 2 வாரங்களுக்கு இதே நிலை நீடித்தால் வீட்டு உபயோக சிலிண்டர் கூட கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாட்டால் சாலையோர கடைகள் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

News March 13, 2026

தவெகவுடன் கூட்டணியா? ரங்கசாமி கூறினார்

image

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. இதனால், தவெகவுடன் அக்கட்சி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்த கேள்விக்கு, அவ்வாறு தவெகவுடன் பேச்சுவார்த்தை நடந்தால் முதலிலேயே கூறிவிடுகிறேன் என்று புதுவை CM ரங்கசாமி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நன்றாக நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!