News February 12, 2025

இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமல்ல

image

மனைவியுடன் இயற்கைக்கு மாறாக உடலுறவு வைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமல்ல என்று சத்தீஸ்கர் ஹைகோர்ட் தெரிவித்துள்ளது. அதேபோல,15 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் இயற்கை மாறாக எந்த வகையில் உடலுறவு வைத்தாலும் அது பலாத்காரம் ஆகாது என்றும் நீதிபதிகள் கூறினர். சத்தீஸ்கரை சேர்ந்த பெண் ஒருவர், கணவரின் இயற்கைக்கு மாறான உடலுறவால் மரணமடைந்த வழக்கை விசாரித்த போது, இந்தக் கருத்தை ஹைகோர்ட் தெரிவித்தது.

Similar News

News February 12, 2025

குட்டை உடை அணிவது குற்றமல்ல: நீதிமன்றம்

image

பாரில் ஆபாச நடனம் ஆடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 7 பெண்களை டெல்லி நீதிமன்றம் விடுவித்தது. பொது இடங்களில் குட்டையான உடைகளை அணிவது குற்றமல்ல எனவும், அவர்களின் நடனம் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினாலே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தியது. குட்டை உடையணிந்து ஆபாச நடனம் ஆடியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், இதனால் சங்கடத்திற்கு ஆளான சாட்சிகளை ஆஜர்படுத்த தவறியதாக நீதிமன்றம் கூறியது.

News February 12, 2025

ரோஹித், கோலிக்கு கபில் தேவ் அறிவுரை

image

கோலியும், ரோஹித்தும் தங்களது முன்னாள் வீரர்களுடன் பேச வேண்டும் என பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவ் அறிவுறுத்தியுள்ளார். வயதாகிவிட்டதால் அவர்கள் விளையாட்டை மறந்து விடுவதில்லை. எனினும், அவர்களின் உடல்களை சரிசெய்யும் விதம் மாறுகிறது. கவாஸ்கர், டிராவிட் போன்றவர்களிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என்று கூறினார். ரோஹித்தும், கோலியும் டெஸ்டில் ஃபார்ம் இல்லாததால் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.

News February 12, 2025

AI தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு ஏற்படாது: PM மோடி

image

AI தொழில்நுட்பத்தால் வேலையிழப்பு ஏற்படாது. ஆனால் வேலையின் தன்மை மாறும் என PM மோடி கூறியுள்ளார். பாரிசில் நடந்த சர்வதேச AI உச்சி மாநாட்டில் பேசிய அவர், இதற்கு முன் எப்போதுமில்லாத வகையில், AI வேகமாக வளர்ந்து வருவதாகவும், ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த நூற்றாண்டின் மனித குலத்திற்கான கோடிங்கை AI எழுதத் தொடங்கி விட்டதாகவும், அது மற்ற தொழில்நுட்பங்களை விட வித்தியாசமானது என்றும் கூறினார்.

error: Content is protected !!