News September 23, 2024

98 நாள்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா… ஜியோ அசத்தல்

image

ஜியோ நிறுவனம் ₹999 கட்டணத்தில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி 98 நாள்கள் ஆகும். இதில் அன்லிமிடெட் 5G டேட்டாவை ஜியோ வழங்குகிறது. இதுதவிர்த்து 5G கவரேஜ் இல்லாத பகுதி எனில் தினமும் 2ஜிபி 4G டேட்டா அளிக்கிறது. அத்துடன் அன்லிமிடெட் அழைப்பு வசதி, தினமும் 100 SMS, நாடு முழுவதும் இலவச ரோமிங் உள்ளிட்டவற்றையும் ஜியோ வழங்குகிறது.

Similar News

News August 23, 2025

சென்னையில் மழை.. காலையிலேயே துயர மரணம்

image

சென்னையில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரலட்சுமி என்ற தூய்மை பணியாளர், இன்று காலை வேலைக்கு செல்லும்போது மழை நீரில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததால், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவருக்கு 12 வயதில் பெண் குழந்தையும், 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள். வீட்டின் ஒரே சம்பாதிக்கும் நபர் இவர்தான். தற்போது அம்மாவை பறிகொடுத்த 2 குழந்தைகளும் யாரும் இல்லாமல் தவிக்கின்றனர்.

News August 23, 2025

ராகுல் காந்தி நடைபயணத்தில் CM ஸ்டாலின்

image

பாஜக, ECI-யை வைத்து வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதற்கு எதிராக ராகுல் காந்தி பிஹாரில் நடைபயணத்தையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இந்த பயணத்தில் CM ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக.27-ல் இந்த பயணத்தில் கலந்துகொண்டுவிட்டு, அங்கிருந்தவாறே அவர் வெளிநாடு செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News August 23, 2025

உங்களிடம் நகை இருந்தால்.. அமைச்சர் கொடுத்த அதிர்ச்சி

image

காது, கழுத்துல நகை போட்டு இருந்தால் மகளிர் உரிமைத்தொகை கிடையாது என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியது நேற்று முதல் விவாதப்பொருளாக மாறியுள்ளது. உண்மையில் அமைச்சர் சொல்வதுபோல் அப்படி எதுவும் கிடையாது. 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் (அ) 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் குடும்பங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கும்.

error: Content is protected !!