News August 15, 2024
சுதந்திர தினம் பற்றி தெரியாத உண்மைகள்

முதல் சுதந்திர தின கொண்டாட்டத்தில் மகாத்மா காந்தி பங்கேற்கவில்லை. கல்கத்தாவில் 1906ஆம் ஆண்டு ஆக. 7ஆம் தேதி முதன்முதலாக தேசிய கொடி ஏற்றப்பட்டது. ஆரம்பத்தில் தேசிய கொடியில் மதக் குறியீடுகள், 8 ரோஜா பூக்கள் மற்றும் ‘வந்தே மாதரம்’ என்ற வசனம் எழுதப்பட்டிருந்தது. முதல் சுதந்திர தினத்தின் போது, நமது தேசிய கீதம் எழுதப்படவில்லை. 1950ல் தான் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய தேசிய கீதம் அரசால் ஏற்று கொள்ளப்பட்டது.
Similar News
News December 3, 2025
₹500 கோடி இல்லனா படம் ஃப்ளாப் தான்!

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன. அனைத்து பகுதிகளிலும் படம் பெரிய விலைக்கு விற்பனையாகி இருக்கும் நிலையில், ஒட்டுமொத்தமாக ₹500 கோடியை கடந்தால் மட்டும் ஹிட் ஸ்டேட்டஸை அடைய முடியும். இதில் தமிழ்நாட்டில் ₹225 கோடியையும், வெளிநாடுகளில் ₹215 கோடியையும் வசூலிக்க வேண்டும் என குறிப்பிடப்படுகிறது. இவ்வளோ பெரிய வசூலை அள்ளி, வெற்றி படமாக அமையுமா ‘ஜனநாயகன்’?
News December 3, 2025
இண்டியா கூட்டணியில் இருந்து விலகலா?

பிஹார் சீட் ஷேரிங்கில் நடந்த பிரச்னையால் IND கூட்டணியிலிருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்சா விலக உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த JMM நிர்வாகி குணால் சாரங், ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க முடியாது என தெரிந்ததால்தான் பாஜக புரளிகளை கிளப்பிவிடுவதாக விளக்கமளித்துள்ளார். மேலும், ஜார்க்கண்டில் ஆளுங்கட்சியாக இருக்கும் JMM எப்போதும் பாஜகவுக்கு அடிபணியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 3, 2025
தொடக்கமே இந்திய அணிக்கு அதிர்ச்சி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ODI-ல் இந்திய அணி இரண்டு ஓப்பனர்களையும் இழந்தது. கடந்த போட்டியில் அரைசதம் அடித்த ரோகித் 14 ரன்களுக்கும், ஜெய்ஸ்வால் 22 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். கடந்த போட்டியில் சதம் அடித்த கோலி, ருதுராஜூடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டு வருகிறார். 12 ஓவருக்கு 77/2 என்ற நிலையில் இந்தியா விளையாடி வருகிறது.


