News April 21, 2025
பல்கலை. வேந்தராக கவர்னரே நீடிப்பார்: பரபரப்பு அறிக்கை

பல்கலை.களின் வேந்தராக கவர்னர் ஆர்.என்.ரவியே தொடர்கிறார் என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது. உதகையில் ஏப். 25, 26-ல் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்றும், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டும் அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, கவர்னரை கண்டித்த உச்சநீதிமன்றம், முதல்வரே பல்கலைக்கழக வேந்தராகும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 26, 2025
அதிகார திமிர்: கம்பீரை தாக்கிய கோலியின் அண்ணன்

தெ.ஆ., எதிரான டெஸ்ட்டில் இந்தியா திணறுவதால் பலரும் கம்பீரை விமர்சிக்கின்றனர். இந்நிலையில், விராட் கோலியின் சகோதரர் விகாஸும் மறைமுகமாக கம்பீரை தாக்கியுள்ளார். ஒருகாலத்தில் வெளிநாட்டு மண்ணில் கூட அசால்ட்டாக வெற்றிபெற்ற IND அணி தற்போது சொந்த மண்ணில் திணறுவதாக கூறியுள்ளார். மேலும், ஒழுங்காக இருந்த விஷயங்களை மாற்றி, அதிகாரம் செலுத்த முயற்சித்த ஒருவரால்தான் இது நடந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
அருணாச்சல் இந்தியாவின் பகுதியே: வெளியுறவுத் துறை

அருணாச்சல் சீனா உடையது எனக்கூறி, அம்மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை சீன அதிகாரிகள் பிடித்துவைத்த சம்பவம் பூதாகரமாகியுள்ளது. இதனையடுத்து, சாங்னான் தங்களுக்கு சொந்தமானது. இந்தியாவால் அருணாச்சல் என்று அழைக்கப்படுவதை அங்கீகரிக்க முடியாது என சீனா கூறியது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா EAM அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்வால், சீனா எவ்வளவு மறுத்தாலும், அருணாச்சல் இந்தியாவின் பகுதிதான் என கூறியுள்ளார்.
News November 26, 2025
சற்றுநேரத்தில் தமிழக அரசியலில் பரபரப்பு திருப்பம்

இன்று ‘சென்யார்’ புயல் உருவாகவுள்ள நிலையில், மறுபுறம் தமிழக அரசியலிலும் புதிய புயல் உருவாகியுள்ளது. ஆம்! தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படும் செங்கோட்டையன், தனது ஆதரவாளர்களுடன் சென்னைக்கு வந்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் (11 மணியளவில்) அவர் தனது MLA பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இன்று மாலையே விஜய்யை அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


