News December 3, 2024
4 மாவட்டங்களில் பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.,யில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலால் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலை., நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News April 28, 2025
பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவம்!

பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் உட்பட 4 பயங்கரவாதிகளைப் பிடிக்க, பஹல்காமின் காட்டு பகுதிகளில் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. உளவுத்துறை அமைப்புகளின் தகவல்களின் அடிப்படையில், மத்திய ஆயுதக் காவல் படை மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையுடன் இணைந்து ராணுவம், பயங்கரவாதிகளை 5 நாட்களில் 4 முறை கண்டதாகவும், இதில் ஒருமுறை துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
News April 28, 2025
ரீ-ரிலீசாகும் அல்டிமேட் காமெடி படம்..!

ஒரு சில படங்கள எத்தன தடவ பார்த்தாலும் சலிக்காது. அப்படி, ஓப்பனிங்ல இருந்து எண்டு வர குலுங்கி குலுங்கி சிரிச்சிட்டே இருக்கிற மாதிரி படம்தான் ‘சுந்தரா டிராவல்ஸ்’. முரளி – வடிவேலு சேர்ந்து கலக்கி இருக்கிற இந்த படம் மறுபடியும் தியேட்டருக்கு வரப்போகுதாம். 2002-ல் ரிலீசான இந்த படத்த அடுத்த மாதம் ரீ-ரிலீஸ் பண்ணப் போறாங்க. மிஸ் பண்ணிடாதீங்க. இந்த படத்துல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு கமெண்ட் பண்ணுங்க!
News April 28, 2025
16 பாகிஸ்தான் யூ-டியூப் சேனல்களுக்கு இந்தியா தடை

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 16 யூ-டியூப் சேனல்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை முன்வைத்து, டான் நியூஸ், சாம்னா நியூஸ், ஜியோ நியூஸ், அக்தர் யூ-டியூப் உள்ளிட்ட யூ-டியூப் சேனல்கள், இந்தியா, இந்திய ராணுவம்- பாதுகாப்புப் படைகள் குறித்து தவறான தகவலை பரப்பியதாக புகார்கள் வந்தன. இதையடுத்து அந்த சேனல்களுக்கு இந்தியாவில் மத்திய அரசு தடை விதித்துள்ளது.