News February 26, 2025
தவெகவில் இணைந்தார் நடிகை ரஞ்சனா நாச்சியார்

நேற்று பாஜகவிலிருந்து விலகிய நடிகையும், மாநில கலை, பண்பாட்டுப் பிரிவு செயலாளருமான ரஞ்சனா நாச்சியார் தவெகவில் இணைந்தார். மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் தவெகவின் 2ஆம் ஆண்டு விழா அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைக்கும் எனவும், விஜய் தமிழக மக்களுக்கு நல்லது செய்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News February 26, 2025
PF வட்டியை உயர்த்த மத்திய அரசு திட்டம்

EPFO வட்டியை 8.35% ஆக உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை வட்டி விகிதத்தை உயர்த்தினால் ஊழியர்கள் நிம்மதி அடைவர். மோடி ஆட்சியில் EPFO தொடர்ந்து 2 முறை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. 2023-24ஆம் ஆண்டில் PF வட்டி விகிதம் 8.25% ஆக உயர்த்தியது கவனிக்கத்தக்கது.
News February 26, 2025
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு: ஒருமுறை மட்டும் எழுதலாம்

10ம் வகுப்பு பொதுத் தேர்வை 2 முறை எழுதும் வரைவு திட்டத்துக்கு சிபிஎஸ்இ நேற்று ஒப்புதல் அளித்தது. அதில் உள்ள அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் மாணவர்கள் 2 முறையும் கட்டாயம் தேர்வு எழுத வேண்டியதில்லை, முதல் தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்வு எழுதினால், 2ஆவது முறை எழுதுவது அவர்களது விருப்பம், 2ஆவது தேர்வில் குறிப்பிட்ட பாடங்களை மட்டும் தேர்வு செய்தும் எழுதலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
News February 26, 2025
அறியாமையில் பேசும் விஜய்: திமுக பதிலடி

இந்தி மொழித் திணிப்பில் திமுகவும், பாஜகவும் ஒன்று சேர்ந்து நாடகமாடுவதாக விஜய் குற்றம் சாட்டியிருந்த நிலையில், திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார். மொழி பற்றி திமுக நாடகமாடுவதாக அறியாமையில் விஜய் பேசுகிறார் என விமர்சித்த அவர், இந்தி மொழிக்கு எதிராக 1938 முதல் போராட்டம் நடந்து வருகிறது. மொழிக்காக பலர் தீக்குளித்து உயிரைக் கொடுத்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.