News May 26, 2024
தமிழக மின்வாரியத்தை புகழ்ந்த மத்திய அமைச்சர்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மின்தடை எண்ணிக்கை மற்றும் கால அளவு குறைவாக இருப்பதாக மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் பாராட்டியுள்ளார். டெல்லியில் நடந்த மின்துறை பகிர்மான நிறுவனங்களின் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், தமிழ்நாட்டின் மின்சார நம்பகத்தன்மை, வளர்ந்த நாடுகளுக்கு சமமானது என்றும் கூறினார். மத்திய அமைச்சரே மின் தடை குறைவு என தமிழகத்தை பாராட்டியது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
Similar News
News March 4, 2026
சற்றுமுன்: 1,000 பேர் மரணம்.. கொடூரம்

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் 1,097 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது . இதில் 181 பேர் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள். போரில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தகவல்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருவதால் காயமடைந்தோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் கூறப்படுகிறது.
News March 4, 2026
தவெக கூட்டணியில் இருந்தும் போட்டியில்லையா?

இதுவரை விஜய்யை நம்பி தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி மட்டுமே கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த கட்சியின் தலைவர் முஸ்தபாவும் ஆக்டிவ்வாக தவெகவுக்காக பல விவாத மேடைகளில் கலந்துகொண்டு வருகிறார். இதனால் விஜய்யிடமும் அவருக்கு நன்மதிப்பு இருக்கிறதாம். ஆனால், முஸ்தபாவோ வரும் தேர்தலில் போட்டியிட விருப்பம் காட்டவில்லை என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தவெக தனித்து களம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது.
News March 4, 2026
சிலரின் தோல்விகளை மறைக்கவே போர்: ஸ்பெயின்

போர் வேண்டாம் என்ற நிலைபாட்டில் ஸ்பெயின் அரசும், மக்களும் உள்ளதாக அந்நாட்டின் PM பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார். <<19293932>>ஸ்பெயின் உடனான வர்த்தக உறவை துண்டிப்பதாக டிரம்ப்<<>> அறிவித்தார். அதற்கு பதிலளித்து பேசிய பெட்ரோ, ஈரான் மீதான போர் மனிதகுலத்தின் மிகப்பெரிய பேரழிவிற்கான தொடக்கம் என்றும், சில அதிபர்கள் தங்கள் தோல்விகளை மறைக்க போரை பயன்படுத்துவதை ஏற்க முடியாது எனவும் டிரம்ப்பை விமர்சித்துள்ளார்.


