News August 7, 2024
மத்திய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஐகோர்ட்

பெங்களூரு குண்டுவெடிப்புக்கு தமிழர்கள்தான் காரணம் என்று ஆதாரமின்றி பேசிய மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே, செய்தியாளர் சந்திப்பை கூட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்புக்கு பதில் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
Similar News
News November 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 532 ▶குறள்: பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. ▶பொருள்: நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்.
News November 27, 2025
Cinema Roundup: தீபிகாவிற்கு ₹12 கோடி நஷ்டம்

*தனுஷின் ‘தேரே இஸ்க் மெயின்’ படம் ப்ரீபுக்கிங்கில் ₹3.8 கோடி வசூலித்துள்ளதாக தகவல். *சீரியல்களில் நடித்து வந்த நடிகர் லிவிங்ஸ்டனின் மகள், சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம். *தெலுங்கில் ‘MAD’ படத்தை இயக்கிய கல்யாண் சங்கர் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல். *தீபிகா படுகோனின் 82°E என்ற சரும பராமரிப்பு பிராண்ட் 2024-25 நிதியாண்டில் ₹12.26 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.
News November 27, 2025
உலகக் கோப்பையை வென்றார் உஸ்பெகிஸ்தான் வீரர்

உஸ்பெகிஸ்தான் ஜவோகிர் சிண்டரோவ், FIDE உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். சீனாவின் வெய் யி உடனான 2-வது டை-ப்ரேக்கில் 1.5-05 என்ற கணக்கில் ஜவோகிர் வென்றார். இதன் மூலம் இளம் வயதில் (19) செஸ் உலகக் கோப்பையை தட்டிய வீரராக சாதனை படைத்துள்ளார். இவருக்கு ₹1.07 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதேநேரம், இந்த போட்டியில் பங்கேற்ற 24 இந்திய வீரர்களில், ஒருவர் கூட தகுதி பெறவில்லை.


