News April 29, 2025
நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

டெல்லியில் PM மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நாளை மீண்டும் கூடுகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, கடந்த 23-ம் தேதி நடந்த இக்கூட்டத்தில் பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற்றம், எல்லை மூடல், சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்திவைப்பு என முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 5 நாள்களாக எல்லையில் பரபரப்பு நிலவும் நிலையில், நாளை இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
Similar News
News April 29, 2025
பாக். பாதுகாப்பு அமைச்சரின் X பக்கம் முடக்கம்

பாக். பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப்பின் X தளப் பக்கத்தை இந்திய அரசு முடக்கியுள்ளது. பஹல்காம் தாக்குதலை அடுத்து, எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. இதனிடையே, இந்திய ராணுவம் விரைவில் ஊடுருவும், நாங்களும் தயாராக உள்ளோம் என குவாஜா பேசியிருந்தார். ஏற்கனவே, இந்திய ராணுவத்துக்கு எதிராக வகுப்புவாதம் உள்பட தவறான தகவல்களைப் பரப்பியதாக 16 யூடியூப் சேனல்களை இந்தியா தடை செய்துள்ளது.
News April 29, 2025
BREAKING: இந்தியா த்ரில் வெற்றி

தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான ODI-ல், இந்திய மகளிர் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. IND-SL-SA இடையிலான முத்தரப்பு ODI தொடர் இலங்கையில் நடந்துவருகிறது. முதல் ஆட்டத்தில் SL-ஐ வீழ்த்திய IND, இன்று நடந்த 2-வது ஆட்டத்தில் 50 ஓவர்களில் 276/6 ரன்கள் குவித்தது. பிரதிகா ராவல் 78 ரன்கள் குவித்தார். 277 ரன் இலக்கை விரட்டிய SA, 261 ரன்களில் ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது.
News April 29, 2025
தகிக்கும் கோடையிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் உங்களது உடல்நலனை காக்க இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க. *நாள்தோறும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் அருந்துதல். *உச்சி வெயிலில் (காலை 11 – மாலை 3) வரை தேவையின்றி வெளியே செல்லாமல் இருங்கள். *உடல் வெப்பநிலையைத் தணிக்க இருமுறை குளியுங்கள்.* பருத்தி ஆடைகளை அணியுங்கள்.* எண்ணெய், கொழுப்பு உணவுகளைத் தவிருங்கள். *செயற்கை குளிர்பானங்கள், மதுபானங்களைத் தவிர்க்க வேண்டும். SHARE IT.