News February 27, 2025
வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களாக ஆய்வு செய்து, 14 திருத்தங்களை மேற்கொள்ள பார்லி. கூட்டுக் குழு பரிந்துரை செய்தது. இந்த 14 திருத்தங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் மார்ச் 10ஆம் தேதி துவங்க உள்ள பட்ஜெட் தொடரின் 2ஆவது அமர்வில், இந்த திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 31, 2026
நாளை முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்!

☛இனி டிஜிட்டல் பரிவர்த்தனைக்கும் ஏதேனும் 2 அம்சங்கள் தேவைப்படும்: PIN/PASSWORD, Registered Device, Finger Print, Face ID. ☛நாடு முழுவதும் E20 (20% எத்தனால் கலந்த பெட்ரோல்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ☛KYC இல்லாத FASTag கணக்குகள் முடக்கப்படும். ☛சில வங்கிகள் டெபிட் கார்டுகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளன. ☛புதிய காப்பீட்டு பாலிசிகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் மட்டுமே வழங்கப்படும்.
News March 31, 2026
2 நாள்களுக்குள் வேட்பாளர் பட்டியல் வரும்: பியூஷ் கோயல்

தமிழகத்தில் மாநில கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். ஆனால் தேசிய கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் இதுவரை வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. பாஜகவின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் 2 நாள்களில் பட்டியல் வெளியாகும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
News March 31, 2026
BREAKING: விலகினார்.. ஸ்டாலினுக்கு அதிர்ச்சி

சீட் மறுப்பால் பல நிர்வாகிகள் கட்சிகளில் இருந்து விலகி வருகின்றனர். அந்தவகையில், திமுக Ex MP சண்முகத்தின் மகனும், குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய செயலாளருமான சுரேஷ்குமார், கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சில ஆதிக்க சக்திகள் தனக்கு அழுத்தம் கொடுத்ததாக, அவர் தலைமைக்கு எழுதிய விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு நிர்வாகிகள் விலகுவது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.


