News March 29, 2025
தடையின்றி கேஸ் சிலிண்டர் கிடைக்கும்

எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள், 3ஆவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம் உருவாகியுள்ளது. இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். இந்நிலையில், வாடிக்கையாளர்கள் பதற்றம் அடைய வேண்டாம்; வீடு மற்றும் வர்த்தக சிலிண்டர்கள் விநியோகம் வழக்கம் போல் நடக்கும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
Similar News
News December 17, 2025
விவாகரத்து பற்றி அன்றே சொன்ன செல்வராகவன்?

செல்வராகவன் புகைப்படங்களை, அவரது மனைவி கீதாஞ்சலி தனது இன்ஸ்டாவில் இருந்து நீக்கியதால், இருவரும் விவகாரத்து செய்ய உள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில், செல்வராகவனின் சமீபத்திய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், மிகமோசமான காலகட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட செத்து பிழைத்து வந்திருக்கிறேன். இதற்கான காரணம் குறித்து இப்போது சொல்ல மாட்டேன். விரைவில் தெரியவரும் என அவர் கூறியிருந்தார்.
News December 17, 2025
நீதிபதி உத்தரவால் இந்தியா பற்றி எரிகிறது: அரசு

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, மதுரை ஐகோர்ட்டில் இன்று 3-வது நாளாக நடந்தது. அப்போது, மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தான் ராம ரவிக்குமார் குறிப்பிட்டார். ஆனால், தனி நீதிபதி (G.R.சுவாமிநாதன்) தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதால், இந்தியா பற்றி எரிகிறது. நீதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கிறார் என அரசு தரப்பு வாதத்தை முன்வைத்தது.
News December 17, 2025
ராசி பலன்கள் (17.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


