News July 25, 2024
ஜூலை 29 முதல் மாணவர்களுக்கு சீருடைகள்

பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஜூலை 29 முதல் சீருடை வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் சரியான அளவுகளை கணக்கெடுத்து சீருடை, காலணிகள் கொள்முதல் செய்யப்படுவதால் தாமதம் ஏற்பட்டதாக விளக்கமளித்துள்ளனர். ஆகஸ்ட் இறுதிக்குள் புத்தகப்பை, வண்ண பென்சில்கள் போன்றவையும் வழங்கப்படும் என்றனர்.
Similar News
News March 5, 2026
ஃபைனலுக்கு முன்னேறுமா இந்திய அணி?

டி20 WC இரண்டாவது அரையிறுதியில், இன்று ENG Vs ING அணிகள் மோதுகின்றன. பேட்டிங், பவுலிங்கில் இந்தியா வலுவாக திகழ்ந்தாலும் அபிஷேக்கின் ஃபார்ம், மோசமான பீல்டிங் கவலையை தருகிறது. மறுபுறம், இங்கிலாந்து அணி பேட்டிங்கில் சால்ட், புரூக்(C), வில் ஜாக்ஸ் & பந்துவீச்சில் அடில் ரஷித், ஆர்ச்சரை பெருமளவு நம்பியிருக்கிறது. வான்கடேவில் Dew-வின் தாக்கம் காரணமாக சேஸ் செய்வது நல்லது. யார் வெல்வார்கள்? உங்க கணிப்பு
News March 5, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 5, மாசி 21 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: துவிதியை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்
News March 5, 2026
கேழ்வரகு கூழ் குடிக்கிறீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க

கோடை வெயிலில் தாகத்தை தணிக்க கம்பங்கூழ் மற்றும் கேழ்வரகு கூழ் குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. இவை இரண்டுமே உடலுக்கு நன்மை என்றாலும், கேழ்வரகு கூழை அளவோடு குடிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஏனெனில் கேழ்வரகில் கூழ் காய்ச்சி குடித்தால், அது நம் உடலின் ரத்தத்தில் மிக விரைவாக சர்க்கரையாக மாறி விடுமாம். எனவே, இதை சர்க்கரை நோயாளிகள் அளவோடு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.


