News February 25, 2025
ஒருங்கிணைந்த அதிமுகவே இலக்கு: சசிகலா

வரும் தேர்தலில் வென்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என சசிகலா கூறியுள்ளார். உசிலம்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவே போட்டியிடும் என்றார். மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கியே தங்கள் பயணம் இருப்பதாகவும், அதில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News February 25, 2025
கும்பமேளாவில் கின்னஸ் சாதனை முயற்சி

மகா கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜில் சத்தமே இல்லாமல் கின்னஸ் உலக சாதனை படைக்கப்படவுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் திரிவேணியில் புனித நீராடிய நிலையில், நதி பாயும் இடங்களில் எல்லாம் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்த ஒரே நேரத்தில் 15,000 தூய்மை பணியாளர்களை பல்வேறு இடங்களில் களமிறக்கி இந்த சாதனை முயற்சி படைக்கப்படவுள்ளது. இதற்கான முடிவுகள் வரும் 27 ஆம் தேதி வெளியாகும்.
News February 25, 2025
ரேஷன் கடைகளில் ஒரே நேரத்தில் பொருள்: அமைச்சர்

ரேஷன் கடைகளில் ஒரே நேரத்தில் அனைத்து பொருள்களையும் வழங்க உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார். உணவுத்துறை உயர் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், அனைத்து பொருள்களும் தரத்துடன் இருப்பதையும், எடை சரியாக இருப்பதையும் உறுதி செய்யவும் ஆணையிட்டார். அரிசி கடத்தலை தடுக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தினார்.
News February 25, 2025
உலகளவில் ஊழியர்களை நீக்கும் ஸ்டார்பக்ஸ்

ஸ்டார்பக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் 1,100 கார்ப்பரேட் ஊழியர்களை நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. யாரெல்லாம் நீக்கப்படுகிறார்கள் என்பது குறித்து இன்று மதியம் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்களையும் நிரப்ப மாட்டோம் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. நிறுவனத்தின் காபி பார்களில் பணிபுரியும் பாரிஸ்டாக்கள் பணிநீக்கத்தில் சேர்க்கப்படவில்லை.