News May 2, 2024

45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையில்லாத் திண்டாட்டம்

image

நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விட்டதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டில் பணவீக்கம் பலமடங்கு அதிகரித்து விட்டதாகவும், தேர்வுத்தாள்கள் அடிக்கடி கசிய விடப்படுவதாகவும், ஊழல்கள் அடிக்கடி நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார். அரசு வேலைவாய்ப்புக்கு முடிவுகட்டும் திட்டங்களை பாஜக கொண்டு வந்திருப்பதாகவும் கூறினார்

Similar News

News January 29, 2026

செங்கை: இனி ரேஷன் கடைக்கு செல்ல வேண்டாம்!

image

செங்கை மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News January 29, 2026

ஜவுளி துறைக்கு CM ஸ்டாலினின் அசத்தல் அறிவிப்பு

image

கோவையில் சர்வதேச ஜவுளித்துறை மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய CM ஸ்டாலின், ஜவுளி நிறுவனங்கள் அதிநவீன இயந்திரங்கள் வாங்க 20% மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்காக ஆண்டுக்கு ₹30 கோடி ஒதுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் ஜவுளித் துறையில் TN-ன் பங்களிப்பு 33% உள்ளது எனவும் ஆயத்த ஆடைத் தொழிலில் மிகப்பெரிய ஏற்றுமதி மாநிலம் TN-தான் என்றும் கூறினார்.

News January 29, 2026

‘அரசுக்கல்லூரியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை’

image

அண்ணா பல்கலை., கொடூரம் போல, சென்னை நந்தனம் அரசுக் கலைக்கல்லூரியில் மற்றொரு மிருகத்தனமான சம்பவம் நடந்துள்ளது. கல்லூரி கேண்டீனில் பணிபுரியும் பெண்ணுக்கு, சமையல் மாஸ்டரான குணசேகர் மற்றும் சிலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். தனக்கு நேர்ந்த கொடூரத்தை அழுதுகொண்டே காவலாளியிடம் அப்பெண் கூறியிருக்கிறார். இதுகுறித்த புகாரின் பேரில், குணசேகரை போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!