News October 29, 2024
கண்டுகொள்ளப்படாத மதுரை

கடந்த ஆண்டு பருவமழையில் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்கள், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட பல உதவிகள் அளிக்கப்பட்டன. அதே அளவுக்கு இந்த முறை, மதுரை பாதிக்கப்பட்டு உள்ளது. மதுரையில் உள்ள பல வீடுகளுக்குள் வெள்ள நீர் நுழைந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு அறிவித்தது போல நிவாரணம் ஏதும் அரசு அறிவிக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். செவி சாய்க்குமா அரசு?
Similar News
News August 23, 2025
தமிழகத்தில் தாமரை மலர்வதை விஜய் பார்ப்பார்: தமிழிசை

மாநாட்டில் ஒரு கொடிக்கம்பத்தை கூட ஒழுங்காக நட முடியாதவர்கள் எப்படி ஆட்சி நடத்துவார்கள் என விஜய்யை தமிழிசை விமர்சித்துள்ளார். விஜய் அரசியலில் புதியவர், அவர் வரவெல்லாம் பாஜகவை ஒன்றும் செய்யாது என கூறினார். தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாவிட்டாலும் தமிழகத்தில் தாமரை எல்லோரும் ஆச்சரியப்படும் அளவுக்கு மலரப்போகிறது, அதை தம்பி விஜய் பார்க்கத்தான் போகிறார் என்றும் தெரிவித்தார்.
News August 23, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 23 – ஆவணி 7 ▶ கிழமை: சனிக்கிழமை ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM, 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶ எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶ குளிகை: 6:00 AM – 7:30 AM ▶ திதி: பிரதமை ▶ சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை.
News August 23, 2025
அமெரிக்காவுக்கு குட் பை… ஏஞ்செலினா முடிவு!

ஒரு காலத்தில் மக்களின் கனவுத் தேசமாக இருந்தது அமெரிக்கா. அந்த நாட்டில் குடியேறவே அனைவரும் விரும்பினர். ஆனால், காலம் மாறிவிட்டது. இப்போது அமெரிக்காவில் இருந்து வெளியேறவே பலரும் விரும்புகின்றனர். ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் வெளியேற முடிவு செய்துள்ள நிலையில், ஏஞ்செலினா ஜோலியும் வெளியேறப் போவதாக கூறப்படுகிறது. அரசியல் நிலையின்மை, அதிகரிக்கும் குற்றங்கள், நிதிச்சுமை போன்றவை இதற்கு காரணங்களாகும்.