News October 4, 2025
உரிமை கோரப்படாத ₹1.84 லட்சம் கோடி

வங்கிகளில் உரிமை கோரப்படாத ₹1.84 லட்சம் கோடி சொத்துக்களை, உரியவர்களுக்கு திருப்பி தரும் பணிகள் தொடங்கியுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உரிய ஆவணங்களுடன் வந்தால், உடனே பணம் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் எனவும், இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், RBI-ன் UDGAM போர்ட்டல் மூலம் சொத்துக்களை கேட்டு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 5, 2025
இமயமலைக்கு பறந்த ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ரிஷிகேஷ் ஆசிரமத்தில் அவர் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த ஒரு வார கால பயணத்தில், பத்ரிநாத் கோயில், பாபா குகைக்கு அவர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. தன்னுடைய படங்கள் வெளியாகும் போதும், மன அமைதி தேவைப்படும் போதும் ரஜினிகாந்த் இமயமலை செல்வது வழக்கம்.
News October 5, 2025
6 நிமிடத்துக்கு ஒரு ரேப்; 17 நிமிடத்துக்கு ஒரு கொலை

இந்தியாவில் குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. NCRB அறிக்கைபடி 2023-ல்: *1 நிமிடத்துக்கு 1 திருட்டு *3 நிமிடங்களுக்கு ஒரு மோசடி *4 நிமிடங்களுக்கு ஒரு குடும்ப வன்முறை *5 நிமிடங்களுக்கு ஒரு கொள்ளை *6 நிமிடங்களுக்கு ஒரு பாலியல் வன்கொடுமை *17 நிமிடத்துக்கு ஒரு கொலை *18 நிமிடத்துக்கு ஒரு பலாத்காரம் நடந்துள்ளது. கடந்த ஆண்டில் இது மேலும் அதிகரித்திருக்கும் என கணிக்கப்படுகிறது.
News October 5, 2025
ராசி பலன்கள் (05.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.