News June 4, 2024
உமர் அப்துல்லா முன்னிலை

மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் பயாஸ் அகமது மிர் களம் கண்டார். இதில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் உமர் அப்துல்லா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். அவரைக் காட்டிலும் பயாஸ் அகமது மிர் பின்தங்கியே உள்ளார்.
Similar News
News September 21, 2025
விஜய் குற்றச்சாட்டு: ஒப்புக்கொண்ட திமுக MLA

நெல் கொள்முதலில், 40 கிலோ மூட்டைக்கு ₹40 கமிஷன் வாங்குவதாக விஜய் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், இவ்வளவு வாங்குவதில்லை, சும்மா ஏதோ வாங்குறாங்க, நான் இல்லைன்னு சொல்லல என்று திருவாரூர் திமுக MLA பூண்டி கலைவாணன் ஓபனாக கூறியுள்ளார். இந்த பணமும் விவசாயிகள் விருப்பப்பட்டு தருவதுதானே தவிர, கட்டாயம் அல்ல என்றும், லோடு மேன் கமிஷன் வாங்குவதற்கும் முதல்வருக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News September 21, 2025
ஈழ விவகாரத்தில் விஜய்யின் நிலைபாடு என்ன?

தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை என்ற ஒற்றை வரியை மட்டும் நேற்று விஜய் குறிப்பிட்டார். ஈழ விவகாரத்தில் காங்., செயல்பாடுகள் குறித்து விஜய் இதுவரை பேசவில்லை. ஒரு நடிகராக ஈழ போராட்டத்தில் பங்கெடுத்த அவர், அரசியல் கட்சி தலைவராக ஈழ விவகாரத்தை தீவிரமாக பேசவில்லை. இதனால், அவ்விவகாரத்தை தவிர்க்கிறாரா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
News September 21, 2025
மனிதனை நம்புங்கள்…!

புதிதாக அறிமுக இல்லாதவர்களிடம் பழகும் போது, மனதில் ஒரு சின்ன தயக்கம் வரும். இவன் நம்மை ஏமாற்றிவிடுவானோ என! ஆனால், நாம் நம்புவர்களால் தான் ஏமாற்றப்படுகிறோம் என்பது புரிய காலம் ஆகும். அதே நேரத்தில், ஒருத்தர் உங்களை ஏமாற்றி விட்டார் என்பதற்காக மனிதர்களை ஒட்டுமொத்தமாக வெறுத்து விட வேண்டாம். அன்பு பாராட்டுங்கள். மனிதனை நம்புங்கள்.. நம்பிக்கைக்குரியவராக மாறுங்கள்!