News March 16, 2025
உக்ரைன் ராணுவ வீரர்கள் ரஷ்ய ராணுவத்தால் சுற்றிவளைப்பு?

உக்ரைன் வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் ரஷ்ய ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், குர்ஸ்கில் ஊடுருவிய உக்ரைன் வீரர்களை உயிருடன் புதின் விட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் ஆயுதங்களை போட்டு சரணடைந்தால், உயிருடன் விடுவதாக புதின் கூறியிருந்தார். ஆனால் வீரர்கள் சுற்றிவளைக்கப்படவில்லை என உக்ரைன் மறுத்துள்ளது.
Similar News
News March 18, 2025
வாழ்வாதாரத்திற்காக பல மொழிகள் கற்கலாம்: AP CM

வாழ்வாதாரத்திற்காக பல மொழிகளை கற்பது அவசியம் என ஆந்திரா CM சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையை ஆதரித்தும், மும்மொழியின் அவசியத்தை வலியுறுத்தியும் ஆந்திரா சட்டப்பேரவையில் பேசிய அவர், மொழி என்பது வெறுப்பதற்காக அல்ல என்றும், ஹிந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி எனவும் குறிப்பிட்டார். TNஇல் உள்ள முக்கிய கட்சிகள் மும்மொழி கொள்கையை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
News March 18, 2025
தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்
அதிகாரம்: தீவினையச்சம்
குறள் எண்: 210
குறள்: அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
பொருள்: வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.
News March 18, 2025
இன்றைய (மார்ச் 18) நல்ல நேரம்

மார்ச் – 18
பங்குனி – 04
கிழமை: செவ்வாய்
நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM & 04:30 PM – 05:30 PM
கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 07:30 PM – 08:30 PM
ராகு காலம்: 03:00 PM – 04:30 PM
எமகண்டம்: 09:00 AM – 10:30 AM
குளிகை: 12:00 PM – 01:30 PM
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்.