News August 25, 2025
விரைவில் இந்தியா வரும் உக்ரைன் அதிபர்

PM மோடியின் அழைப்பை ஏற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வர உள்ளார். இந்த தகவலை பகிர்ந்த அந்நாட்டு தூதர் அலெக்சாண்டர் போலிஷ்சுக், பயணத் தேசி விரைவில் இறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த பயணத்தில் ரஷ்யாவுடனான போர் மற்றும் இந்தியா – உக்ரைன் உறவு குறித்து, மோடியுடன் ஜெலன்ஸ்கி ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. போரை நிறுத்த ஏற்கனவே புதினிடமும் மோடி ஆலோசித்துள்ளது கவனிக்கத்தக்கது.
Similar News
News August 25, 2025
வரலாற்றில் இன்று

1952 – நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் பிறந்தநாள்
1994 – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பிறந்தநாள்
1998 – தனுஷ்கோடி அருகே அகதிகளின் படகு கவிழ்ந்ததில் 45 பேர் பலி
2012 – நிலவில் முதன்முதலாக கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் நினைவு நாள்
News August 25, 2025
நான் SK-வின் certified ஃபேன் கேர்ள்: ருக்மினி

மதராஸி படம் தன் மனதுக்கு நெருக்கமான படம் என்று நடிகை ருக்மினி வசந்த் தெரிவித்துள்ளார். தனக்கு தொடக்க காலத்திலேயே, அன்பை அள்ளிக்கொடுக்கும் தமிழ் ரசிகர்களுக்கு நன்றி எனவும், மதராஸி இசை வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார். தனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் முருகதாஸுக்கு நன்றி சொல்லிய அவர், தான் SK-வின் certified ஃபேன் கேர்ள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News August 25, 2025
மலாலா யூசஃப்சாய் பொன்மொழிகள்

▶ ஒட்டுமொத்த உலகமும் மவுனம் காக்கும் போது, ஒரே ஒரு குரல்கூட சக்திவாய்ந்ததாக மாறும். ▶ ஒரு குழந்தை, ஒரு பேனா, ஒரு புத்தகம் ஆகியவை உலகையே மாற்றும். ▶ நாம் அமைதியாக இருக்கும்போதுதான் நமது குரலின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். ▶ என்னால் மட்டுமே என் வாழ்க்கையை மாற்ற முடியும். ▶ பெண்கள் கல்வியைப் பெற வேண்டும் என்றால், அவர்கள் சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.