News August 2, 2024
ரஷ்யாவின் 90 டிரோன்களை வீழ்த்திய உக்ரைன்

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா சரமாரியாக டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. அவற்றில் 90 டிரோன்களை அந்நாட்டின் வான் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனினும், இது இந்த ஆண்டின் மிகப்பெரிய தாக்குதல் என உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. அண்மைக் காலமாக உக்ரைன் மீதான போரை ரஷ்ய ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
Similar News
News November 14, 2025
திருப்பத்தூர்: B.Sc, BE, B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு..

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி. விருப்பமுள்ளவர்கள்<
News November 14, 2025
பிஹார் தேர்தல் முடிவு.. ஆரம்பத்திலேயே திடீர் திருப்பம்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடந்து வருகிறது. ஆரம்பத்தில் ஜேடியூ – பாஜக கூட்டணி முன்னிலை பெற்ற நிலையில், தற்போது திடீர் திருப்பமாக ஆர்ஜேடி – காங்., கூட்டணி முன்னிலை வகிக்க தொடங்கியுள்ளது. ஜேடியூ – பாஜக கூட்டணி 38, ஆர்ஜேடி – காங்., 42, ஜன் சுராஜ் ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன. இந்த நிலவரம் எந்த நேரத்திலும் மாறலாம்.
News November 14, 2025
பிஹார் தேர்தல் முடிவுகள்.. ஆரம்பமே அபாரம்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஜேடியூ- பாஜக கூட்டணி 15 இடங்களிலும், ஆர்ஜேடி – காங்., கூட்டணி 10 இடங்களிலும், ஜன் சுராஜ் 2 இடங்களிலும், மற்றவை 1 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.


