News August 27, 2025
உக்ரைன் – ரஷ்யாவிற்கு பேரழிவு ஏற்படும்: டிரம்ப் எச்சரிக்கை

உக்ரைன் -ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்தாவிட்டால் இருநாடுகள் மீதும் பொருளாதார போர் தொடுக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். இதில் தனக்கு விருப்பம் இல்லை என்றாலும், இது பேரிழப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை செய்தும், புடினும், ஜெலன்ஸ்கியும் அதற்கு பிடிகொடுக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 26, 2026
சற்றுநேரத்தில் விஜய்யுடன் இணைகிறார்

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மாநில பொதுச் செயலாளர் டி.செல்வம், இன்னும் சற்றுநேரத்தில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைகிறார். தவெகவின் பனையூர் அலுவலகத்தில் மதியம் 3 மணிக்கு இணைப்பு விழா நடைபெறவுள்ளது. இதில் டி.செல்வதுடன், அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகளும் தவெகவில் இணைவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
News March 26, 2026
கிச்சனில் பிளாஸ்டிக்.. இவ்வளோ DANGER-ஆ!

பிளாஸ்டிக்கில் உணவு சேமிப்பது உடலுக்கு கெடு விளைவிக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் *இறைச்சியை பிளாஸ்டிக் டப்பாவில் வைத்தால் பாக்டீரியா, வைரஸ் உருவாகும் *சூடான உணவுகளை பிளாஸ்டிக் டப்பாவில் வைத்தால் கெமிக்கல்கள் உணவோடு கலக்கும் *எண்ணெய், கொழுப்பு கொண்ட உணவுகள் பிளாஸ்டிக்குடன் வினைபுரிந்து உணவின் தரத்தை கெடுக்கும். பிளாஸ்டிக்கிற்கு பதிலாக எவர்சில்வர், கண்ணாடி பாத்திரங்களை உபயோகிப்பது சிறந்தது.
News March 26, 2026
விரைவில் திருமணம்? சாய் பல்லவி சொன்ன பதில்!

தென்னிந்திய சினிமாவில் உச்சம் தொட்டுள்ள நடிகை சாய் பல்லவி, தற்போது பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். அவரது நடிப்பில் ‘ஏக் தின்’, ‘ராமாயணம்’ போன்ற பாலிவுட் படங்கள் தயாராகி வருகின்றது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம், உங்களுக்கு திருமணம் எப்போது? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இப்போதைக்கு திருமணம் இல்லை என்றும், தான் சிங்கிளாக இருப்பதாகவும் சாய் பல்லவி சிரித்தபடி கூறினார்.


