News October 8, 2025
ரஷ்யாவிற்காக போரிட்ட இந்தியரை பிடித்த உக்ரைன்

ரஷ்யாவிற்காக போரிட்ட இந்தியர் ஒருவரை உக்ரைன் படைகள் சரணடைய செய்துள்ளன. குஜராத்தைச் சேர்ந்த மஜோதி சஹில் முகமது ஹுசேன் என்பவர் ரஷ்யாவிற்கு படிக்கச் சென்றுள்ளார். ஆனால், அங்கு போதைப்பொருள் பயன்படுத்தியதால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறைக்கு செல்வதை தவிர்க்க அவர் ரஷ்யாவிற்காக போரில் சண்டையிட சம்மதித்துள்ளார். இதுபற்றி அவர் வாக்குமூலம் அளிக்கும் வீடியோவை உக்ரைன் வெளியிட்டுள்ளது.
Similar News
News October 8, 2025
மூலிகை: பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ➤பெருங்காயப் பொடியை வறுத்து, வலி உள்ள சொத்தைப் பல்லின் குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி குறையும் ➤பெருங்காயப் பொடியை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் பிரச்சனை தீரும் ➤தினமும் பெருங்காயத்தை உணவோடு சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் தீரும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.
News October 8, 2025
9-வது பேட்ஸ்மேனாக கூட இறங்குவேன்: சஞ்சு சாம்சன்

நடப்பாண்டு சிறந்த பேட்ஸ்மேனுக்கான CEAT T20I Batter விருதை சஞ்சு சாம்சன் வென்றுள்ளார். இந்த விருதை தனது மனைவிக்கு சமர்பிப்பதாகவும், இந்திய அணி ஜெர்ஸியில் விளையாட 10 ஆண்டுகள் கடினமாக உழைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். கில்லின் டி20 வருகையால் மிடில் ஆர்டருக்கு மாற்றப்பட்டது குறித்த கேள்விக்கு, 9-வது பேட்ஸ்மேனாகவோ அல்லது பவுலிங் செய்ய சொன்னாலோ கூட அணிக்காக செய்வேன் என்றும் கூறியுள்ளார்.
News October 8, 2025
USA-வுக்கு எதிராக திரும்பிய உலக நாடுகள்

பக்ராம் விமானப்படை தளத்திற்கு உரிமை கோரியதற்கு, ஆப்கானில் ஒரு அங்குல நிலத்தை கூட தரமுடியாது என அந்நாடு பதிலளித்திருந்தது. இதனால், ராணுவ உதவியுடன் அவ்விடம் கைப்பற்றப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். இந்நிலையில், USA-ன் போக்கு ஏற்கத்தக்கது அல்ல என இந்தியா, ரஷ்யா, சீனா, ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளன. உலக அமைதிக்காக போராடுவதாக கூறும் டிரம்ப் ஆப்கான் இடத்தை கைப்பற்ற எண்ணுவதை நிறுத்துவாரா?