News August 6, 2024

இங்கிலாந்து செல்வோர் கவனமாக இருக்க அறிவுரை

image

இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அங்கு சில இடங்களில் போராட்டம் நடந்து வருவதால், அப்பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. லண்டனில் உள்ள இந்திய தூதரகம், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் அவசர உதவிக்கு +44(0)20 7836 9147 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கூறியுள்ளது.

Similar News

News January 19, 2026

ராசி பலன்கள் (19.01.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News January 19, 2026

பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா

image

பிக்பாஸ் தமிழ் 9-வது சீசனில், திவ்யா கணேசன் டைட்டில் வின்னராக உருவெடுத்துள்ளார். 28-வது நாளில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்த இவர், வீட்டில் நடந்த பிரச்னைகளை தைரியமாக எதிர்கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில், அதிக வாக்குகளை பெற்று பிக்பாஸில் மகுடம் சூடியுள்ளார். இவரது திறமைக்கு விரைவிலேயே கோலிவுட்டில் பல படங்களில் கமிட் ஆவார் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

News January 18, 2026

விஜய்க்கு அபரிமித செல்வாக்கு உள்ளது: கிருஷ்ணசாமி

image

விஜய் மற்ற கட்சிகளின் ஓட்டுகளை பிரிப்பார் என்பதைவிட, அவரே ஒரு சக்தியாக மாறுவார் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். விஜய்யால் எவ்வளவு வாக்குகளை பெற முடியும் என்பதை கூற முடியவில்லை என்றாலும், அவர் அபரிமிதமான செல்வாக்குடன் இருக்கிறார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றார். அவர் மீது எவ்வளவு குற்றச்சாட்டுகளை தூக்கி வீசினாலும், அது அவருக்கு சாதகமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!