News September 28, 2024
இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க இங்கிலாந்து ஆதரவு

ஐ.நா சபையின் பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார். ஐநா பொதுச்சபையில் உரையாற்றிய அவர், “ஐ.நாவின் அனைத்து அமைப்புகளும் சீர்திருத்தப்பட வேண்டும். அரசியல் காரணங்களுக்காக பாதுகாப்பு அவை முடக்கப்படக்கூடாது. பிரேசில், ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
Similar News
News November 14, 2025
Byelection results: தேசிய கட்சிகள் முன்னிலை

ஜூபிளி ஹில்ஸ் (தெலங்கானா) – காங்., தரன் தரன் (பஞ்சாப்) – ஆம் ஆத்மி, கட்ஸிலா (ஜார்க்கண்ட்) – JMM, அன்டா (ராஜஸ்தான்) – காங்., டம்பா (மிசோரம்) – மிசோ தேசிய முன்னணி, நுவாபடா (ஒடிசா) – BJP, புட்கம் – ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, நக்ரோட்டா (ஜம்மு காஷ்மீர்) – BJP என முன்னணியில் உள்ளன. இடைத்தேர்தல் நடைபெற்ற 8 தொகுதிகளில் தலா 2 இடங்களில் BJP, காங்., முன்னிலையில் உள்ளன.
News November 14, 2025
விமானப்படையில் வேலை, டிகிரி போதும்: APPLY NOW

விமானப்படையில் Flying and Ground Duty பதவிகளில் 340 காலிப்பணியிடங்கள் உள்ளன. வயது வரம்பு: 20 – 26 வயது வரை. தகுதி: திருமணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும். தொழில்நுப்ட பிரிவில் தரைத்தளப் பணிக்கு பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்வு: உடற்தகுதி, உளவியல் சோதனை, மருத்துவ பரிசோதனை. விண்ணப்பிக்கும் தேதி: நவ.17-டிச.14 வரை. விண்ணப்பிக்க இங்கே க்ளிக் செய்யவும். வேலை தேடுவோருக்கு SHARE IT.
News November 14, 2025
162 இடங்களில் NDA கூட்டணி முன்னிலை

பிஹார் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, NDA – 162 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. MGB – 76, ஜன் சுராஜ் – 3, மற்றவை – 2 இடங்களில் முன்னிலையில் உள்ளன. 243 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.


